ஒரு அங்குல நிலம் கூட கைப்பற்ற முடியாது

0
144

அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீன படைகள் நமது நாட்டு எல்லைக்குள் ஊருவ முயன்றது, இதில் ஏற்பட்ட இருதரப்பு வீரர்களுடனான மோதல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமித்ஷா, “நாட்டில் தற்போது பா.ஜ.க அரசு உள்ளது.எங்கள் அரசு இருக்கும்வரை நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது.அருணாச்சலப் பிரதேசத்தில் நமது இந்திய ராணுவ வீரர்கள் காட்டிய வீரத்திற்கு நான் வணங்குகிறேன்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here