பாரதத்தின் வடக்கில் உள்ள காசிக்கும், தெற்கில் உள்ள தமிழகத்திற்கும் இடையே உள்ள மிகத்தொன்மையான பாரம்பரிய, கலாச்சார, நாகரீக பிணைப்புகளை மீட்டுருவாக்கம் செய்யும் பொருட்டு பாரதப் பிர்தமர் மோடியின் முன்முயற்சியால், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி கடந்த நவம்பர் 17ல் தொடங்கியது.இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தில் கோலாகலமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து சுமார் 2,592 பேர் கலந்து கொண்டனர்.இந்த காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி இன்ன்று நிறைவு பெறுகிறது. இதற்கான விழாவில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷண் ரெட்டி, எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். முன்னதாக ஆளுநர் ரவி, நேற்று முன்தினம் காசி விஸ்வநாதர் கோயிலில் நடைபெற்ற இளையராஜாவின் பக்தி கச்சேரியில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.