1. அ. வேங்கடாசலம் பிள்ளை டிசம்பர் 20, 1886 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள மோகனூர் என்ற சிற்றூரில் பிறந்தார். சிறந்த தமிழறிஞர். ”கரந்தைக் கவியரசு” என அழைக்கப்பட்டவர்.
2. சங்க இலக்கியப் பாடல்களை மட்டுமல்லாது இலக்கணங்களையும் குறிப்பாக, தொல்காப்பியத்தையும் மனப்பாடமாக நூற்பா எண்ணோடு சொல்லக்கூடியவர்.
3. கரந்தைத் தமிழ்ச் சங்க அமைச்சராகவும், சங்கத்து இதழாகிய “தமிழ்ப்பொழில்” ஆசிரியராகவும் பணியாற்றினார். தமிழ்ச்சங்கத்தின் மிகப்பெரும் பணி தனித்தமிழைப் பரப்பியது தான்.
4. ந.மு.வே.நாட்டாருடன் இணைந்து ”தொல்காப்பிய- சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை” என்ற நூலைப் பதிப்பித்துள்ளார்.