வழக்கறிஞர் பராசரனுக்கு விருது

0
208

உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் அட்டர்னி ஜெனரலும் ஸ்ரீராம ஜென்மபூமி வழக்கை தர்க்கரீதியாக முடிவுக்குக் கொண்டு வந்த உண்மையான ராம பக்தருமான கே. பராசரனுக்கு சென்னையில் உள்ள ஸ்ரீ பர்பஜார் குமார்சபா புத்தகாலயா ஏற்பாடு செய்த விழாவில் ‘டாக்டர் ஹெட்கேவார் பிரக்யா சம்மான்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு சோஹோ நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு தலைமை வகித்தார்.ஆர்.எஸ்.எஸ் அகில் பாரதிய காரியகாரிணி சதாஸ்ய சுரேஷ் ஜோஷி, ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வரி ஆலோசகர் சஜ்ஜன் கே.ஆர் துளசியான் கலந்து கொண்டார்.

இதில் பேசிய சம்பத் ராய், 5,000 ஆண்டுகால ஸ்ரீராம ஜென்மபூமி வழக்கின் நடவடிக்கைகள் எவ்வாறு நடந்தன என்பதை எடுத்துரைத்தார்.வெற்றி என்பது நமது ஹிந்து கலாச்சாரத்தின் வெற்றியே தவிர இது கோயிலுக்கான சண்டை அல்ல. இது ஹிந்துஸ்தானின் பெருமை என்றார்.

சுரேஷ் பையா ஜி ஜோஷி தனது உரையில், டாக்டர் ஹெட்கேவார் மற்றும் பராசரன் அவர்களிடம் காணப்படும் ஒற்றுமைகளை எடுத்துக்காட்டினார். “பராசரன் அவர்களுக்கு இன்று வழங்கப்படும் மரியாதை அவரது வயது, விசுவாசம் அல்லது மூத்த நபர் என்பதால் அல்ல, மாறாக ஹிந்து கலாச்சாரம் மற்றும் பகவான் ஸ்ரீராமரின் மீதான பக்திக்காக மட்டுமே. அவர்கள் பாதையைக் காட்டினர், தேசத்திற்கான சாலை வரைபடத்தை அமைத்தனர். பராசன் வாய்ப்புக்காக காத்திருக்கும் நபர் அல்ல, சமுதாயத்தில் சரணடைந்து, மாற்றத்தை ஏற்படுத்த, சமுதாயத்தில் நம்பிக்கையை ஏற்படுத்த, மனதளவில் தயாராகி, நம் கலாச்சாரத்தின் பெருமையை மீட்டெடுத்தவர். அவர் தனது வெற்றியின் பெருமையை ஒருபோதும் எடுத்துக் கொள்ளவில்லை, மேலும் ஸ்ரீராமரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு கருவியாக மட்டுமே அவர் எப்போதும் தன்னை உணர்ந்தார்” என கூறினார்.

கே.பராசரன் தனது உரையில், வழக்கை வாதிடும்போது சம்பத் ராய் எவ்வாறு ஆதார ஆவணங்களுடன் பங்களித்தார் என்று கூறினார்.தன் மீது பொழிந்த பாராட்டுக்களால் அவர் பணிவாக உணர்ந்தார்.இது பகவான் ராமரின் சங்கல்பமாகும், மேலும் அயோத்தி வழக்குக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவரும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றார்.ஸ்ரீதர் வேம்பு தனது பேச்சில், பராசரன் அவர்களுக்கும் அவரின் தேச சேவைக்கும் பகவான் ராமரின் சேவைக்கும் நன்றி தெரிவித்தார்.மென்பொருள் செயல்பாடுகளுடன் சட்டத்தை இணைக்கும் கணினி மொழியை உருவாக்க முயற்சிப்பதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here