காஷ்மீர் இல்லாமல், பாகிஸ்தான் முழுமையடையாது என்று பாகிஸ்தான் கூறினால், கராச்சி, லாகூர் மற்றும் நங்கனா சாஹிப் இல்லாத பாரதம் முழுமையடையாது என்று நாங்கள் மீது உரிமை கோரும் கோஷங்களை எழுப்புவதை யாராலும் தடுக்க முடியாது என்று ஆ.ர்எஸ்.எஸ் மூத்த தலைவரும், முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்சின் புரவலரும் வழிகாட்டியுமான இந்திரேஷ் குமார் கூறினார்.
அய்வான் இ காலிப் ஆடிட்டோரியத்தில் நடந்த 21வது நிறுவன தின விழாவில் பேசிய இந்திரேஷ் குமார், “பாகிஸ்தானுக்கு அவர்களுக்கு புரியும் மொழியில் தகுந்த பதிலடியை பாரதம் கொடுக்க வேண்டியது அவசியம். பலுசிஸ்தான், சிந்து மற்றும் பாகிஸ்தானின் பிற பகுதிகள் ஏற்கனவே அந்த நாட்டிலிருந்து வெளியேற்றக் கோரி வருகின்றன. இந்தப் பிராந்தியங்களில் உள்ள மக்கள் பிரிவினைக்காகப் போராடி வருவதால், எதிர்காலத்தில் பாகிஸ்தான் சிதைவடையும் விளிம்பில் உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு காஷ்மீர் நம்முடையது, அதை நாம் திரும்பப் பெற வேண்டும். முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கே.எஸ் சுதர்சன், இஸ்லாமிய அறிஞர் மௌலானா வஹிதுதீன் கான், அகில இந்திய இமாம் அமைப்பின் முன்னாள் தலைவர் மௌலானா ஜமில் இலியாசி மற்றும் பலர் முன்னிலையில் 24 டிசம்பர் 2002 அன்று முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் (எம்.ஆர்.எம்) நிறுவப்பட்டது. முஸ்லீம் சமூகத்தின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும், நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பை உறுதி செய்வதற்காகவும் ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாக இது தொடங்கப்பட்டது. இந்த மண்ணில் மூச்சுத் திணறல் அடைபவர்களுக்கு இந்த நாட்டில் இடமில்லை, அவர்களுக்கு ‘ஜஹானும்’ கூட இல்லை” என்று கூறினார்.
முன்னதாக, எம்.ஆர்.எம் மீடியா இன்சார்ஜ் ஷாகித் சயீத் எம்.ஆர்.எம் அமைப்பின் 20 ஆண்டு பயணத்தை காட்சிப்படுத்திய குறும்படம் பார்வையாளர்களுக்கு திரையிடப்பட்டது, இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் ராஷ்டிரிய மஞ் அமைப்பின் புதிய லோகோவையும் இந்திரேஷ் குமார் வெளியிட்டார். இந்திரேஷ் குமார் தனது உரையில், முத்தலாக், சட்டப்பிரிவு 370 மற்றும் 35A, ராம்ஜம்நாபுய் தீர்ப்பு, பசுவதைத் தடை போன்ற பல்வேறு சமூக, தேசிய மற்றும் மரபு சார்ந்த பிரச்சனைகளில் எம்.ஆர்.எம் அமைப்பின் வெற்றிக் கதைகளை விவரித்தார்.
முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியைப் பற்றிப் பேசிய அவர், பாரதத்தி உள்ள சில அறிவுஜீவிகள் இங்குள்ள முஸ்லிம்கள் நிலையற்றவர்களாகவும், பாதுகாப்பற்றவர்களாகவும் இருப்பதாகக் கூறியதாகக் கூறினார். இந்நாட்டு முஸ்லிம்கள் ஹிந்துஸ்தானிகள் என்பதுதான் உண்மை. அவர்கள் எப்போதும் ஹிந்துஸ்தானிகளாக இருந்தனர் அப்படிதான் இருப்பார்கள். அவர்கள் தனது நாட்டை எல்லை கடந்து நேசிக்கிறார்கள். அவர்களை யாரும் அச்சுறுத்த முடியாது. அரசியல் நிர்ணய சபையின் அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களும் ஜம்மு காஷ்மீருக்கு 370வது பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டபோது அதனை எதிர்த்ததை கிட்டத்தட்ட மறந்துவிட்டனர். அது அப்போதைய பிரதமர் நேருவின் விருப்பப்படி ஒரு தற்காலிக ஏற்பாடாகவே அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், நரேந்திர மோடி அரசால் அது அகற்றப்படும் வரை சுமார் 70 ஆண்டுகள் நீடித்தது என்றார்.
மத்திய அரசைப் பாராட்டிய அவர், தற்போதைய அரசு 8.5 கோடி முஸ்லிம் பெண்களுக்கு முத்தலாக் என்ற மனிதாபிமானமற்ற வழக்கத்திலிருந்து விடுதலை அளித்து, அவர்கள் கண்ணியமான வாழ்க்கையை நடத்துவதற்கான வாய்ப்பை வழங்கியது. அரசியல் கட்சிகள் எப்பொழுதும் முஸ்லிம்களை வாக்கு வங்கியாகவே கருதுகின்றனர், அப்படித்தான் நடத்துகின்றனர். ஆனால், தற்போதைய மத்திய அரசு, முஸ்லிம்களை சமமான குடிமக்களாகக் கருதி அவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளையும் வசதிகளையும் வழங்கி அவர்கள் முன்னேறி மற்ற சமூகங்களுக்கு இணையாக உயர முடியும் என காட்டுகிறது.
“தேசம் தான் முதலில், தேசம் தான் எப்போதும், தேசம் தான் கடைசிவரை” என்ற கொள்கை முழக்கத்துடன் எம்.ஆர்.எம் முன்னேறியது. மக்கள் அதனுடன் இணைந்தனர். எம்.ஆர்.எம், மக்களிடம் தேசத்தின் மீதான அன்பைப் புகுத்தி, அதன் கௌரவத்தையும் பெருமையையும் பாதுகாக்க, அதற்காக தியாகம் செய்வதில் வெற்றி பெற்றது. இந்த அமைப்பு, தெய்வீக ஆசீர்வாதங்களைக் கொண்ட ஒரு மன்றமாக மாறியுள்ளது. பண்பும், தியாகமும் ஒருவரை சொர்க்கத்தில் கொண்டு சேர்க்கின்றனவே தவிர, வழக்கு, மதம், பணம், கல்வி போன்றவற்றால் அல்ல என்பதை எம்.ஆர்.எம் தொண்டர்கள் அறிவார்கள் என்றார்.
இந்த நிகழ்வில் எம்.ஆர்.எம் தேசிய அழைப்பாளர்கள் முகமது. அப்சல், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினராக இருக்கும் டாக்டர். ஷாஹித் அக்தர், பிரபல புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். மஜித் தாலிகோடி, அபுபக்கர் நக்வி, ஷாஹித் சயீத், பிலால் உர் ரஹ்மான், உத்தராகண்ட் மதரசா வாரியத் தலைவர் டாக்டர் தாஹிர் ஹுசைன், குர்ஷித் ரஜாக்கா, டாக்டர் இம்ரான் சௌத்ரி, தேசிய கன்வீனர் எம்.ஆர்.எம் மகிளா பிரகோஷ்த் ஷாலினி அலி, ஷானாஸ் அப்சல், இர்பான் மிர்சா, டெல்லி எம்.ஆர்.எம் கன்வீனர் ஹபீஸ் சப்ரீன் மற்றும் அஜ்மீர் தர்கா கமிட்டி உறுப்பினர் காசிம் மாலிக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.