யோக ஆசனங்கள் ப்ராணாயாமம் உடல் & மனநல மேம்பாட்டிற்கும் சீராக இருப்பதற் கும் பெரும் பங்கு வகிக்கிறது.
பாலைவன மதத்தவர்கள் யோகா தங்கள் மதத்திற்கு எதிரானது. யோகா என்ற போர்வையில் ஹிந்துத்துவத்தை மறை முகமாக அரசு திணிக்கிறது என்றெல்லாம் நமது நாட்டில் தீவிர பிரச்சாரம் செய்தனர்.
இன்று சௌதி அரேபிய அரசு யோகாவை அந்நாட்டின் விளையாட்டுத் துறையில் ஒரு பகுதியென அறிவித்துள்ளது.
சர்வதேச யோகா தினத்தை கடை பிடிக்கி றது. சௌதி யோகா அகடமி ஒன்றை ஆரம்பித்து யோகாவை பரப்பி வருகிறது.
சௌதியின் முதல் யோகாசாரினியும் பத்மஶ்ரீ விருது பெற்றவருமான Nouf AL Marwaai என்பவர் யோகாவின் பயன்களை எடுத்துரைத்து வருகிறார்.
சௌதி அரேபிய அரசு யோகாவின் பயன்களை மற்ற அண்டை நாடுகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் டிசம்பர் 22 முதல் 30 வரை யோக பயிற்சியுடன் கூடிய கருத்தரங்கினை நடத்தி வருகிறது.
இந்நிகழ்ச்சியில் ஐக்கிய அமீரகம், ஓமன், எகிப்து, துனிஷியா, ஏமன், மொராக்கோ, அல்ஜீரியா, லிபியா, பாலஸ்தீனம் மற்றும் மௌரிடேனிய (Mauritania) என 11 நாடு களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
சௌதி அரேபியாவில் இம்மாதிரி பல மாற்றங்கள் நடைபெற தற்போதைய பிரதமர் மொஹம்மத் பின் ஸல்மான் அவர்களின் தொலைநோக்குப் பார்வையே ஆகும்.