அக்னி வீரர்களுக்கான பயிற்சி துவங்கியது

0
166

அக்னிபாத் ராணுவ ஆள்சேர்ப்புத் திட்டத்தில் எதிர்க்கட்சிகள் நாடகமாடி வரும் நிலையில், வருங்கால அக்னிவீரர்களின் முதல் தொகுதிக்கான பயிற்சி தற்போது நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. பயிற்சிக்காக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ராணுவ காவல் படை தளத்தை அடைந்த அக்னி வீரர்களின் முதல் குழுவில் பெண்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேர்ந்த இந்த எதிர்கால அக்னிவீரர்கள், அக்னிபாத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறவுள்ளனர். பதிவு மற்றும் தேர்வுகளுக்குப் பிறகு அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சி முடிந்ததும், தேசத்துக்குச் சேவை செய்வதில் இவர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள். மகாராஷ்டிராவில் உள்ள அகமதுநகர், கவசப் படைப் பயிற்சி மையம், நாசிக்கில் உள்ள பீரங்கி பயிற்சி மையம், ஹைதராபாத்தில் உள்ள ஜக்ரிஃப் ரெஜிமென்ட் சென்டர், மத்திய பிரதேசம் ஜபல்பூரில் உள்ள எஸ்டிசி. ஜபல்பூர், பெங்களூருவில் உள்ள மிலிட்டரி போலீஸ் கார்ப்ஸ் டிரைனிங் சென்டர் ஆகிய இடங்களில் ஆண் அக்னி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பெண் அக்னிவீராங்கணைகளுக்கு, ஜார்கண்ட்டில் உள்ள பஞ்சாப் ரெஜிமென்ட் சென்டர் மற்றும் சீக்கிய ரெஜிமென்ட் மையம், பீகார் டானாபூரில் உள்ள பீகார் ரெஜிமென்டல் மையம், உத்தரகாண்ட் குமாவோன் ரெஜிமென்டல் மையம், கோவாவில் உள்ள எஸ்.டி.சி (2) பயிற்சி மையம், நாக்பூரில் உள்ள கார்ட்ஸ் ரெஜிமென்ட் மையம் ஆகியவற்றில் பயிற்சிகள் துவங்கியுள்ளன. இதேபோல ஒடிசாவில் உள்ள ஐ.என்எ.ஸ் சில்காவில் கடற்படையின் முதல் தொகுதி அக்னிவீரர்களுக்கும் பயிற்சி தொடங்கியுள்ளது. இந்த அக்னிவீரர்கள் எல்லாம் நான்கு ஆண்டுகளுக்கு ராணுவத்தில் பணியாற்றுவார்கள். நான்கு வருட சேவைக்குப் பிறகு இவர்களது சேவை மறுஆய்வு செய்யப்படும். ஆய்வுக்குப் பிறகு, 25 சதவீத அக்னிவீரர்கள் ராணுவத்தில் மேலும் பணியாற்ற முடியும். அதில் இருந்து வெற்றிகரமாக பணி முடித்து வெளியேறுபவர்களுக்கு சிறந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். இவர்களுக்கு வேலை வழங்க பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகள் உறுதியளித்துள்ளன. அக்னி வீரர்கள் ஆட்சேர்ப்பைத் தவிர, ராணுவத்தில் அதிகாரிகள் ஆட்சேர்ப்பு பணிகள் முன்பை போலவே என்.டி.ஏ மற்றும் சி.டி.எஸ் மூலம் தொடர்ந்து இயங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here