ஐ.நா அமைதிப்படையில் அதிக அளவிலான இந்திய ராணுவ
வீராங்கனைகள் அடங்கிய படைப்பிரிவு, தெற்கு சூடான் மற்றும் சூடான் இடையிலான அபேய் எல்லைப்பகுதியில் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ராணுவம் தனது டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “இதை பார்க்க பெருமையாக உள்ளது. ஐ.நா. அமைதி நடவடிக்கைகளில் பாரதம் தீவிரமாக பங்கேற்கும் பாரம்பரியம் உள்ளது. இதில் நமது பெண்கள் சக்தியும் பங்கேற்பது இன்னும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.