என்.சி.சி குடியரசு தின முகாம் துவக்கம்

0
184

2023ம் ஆண்டுக்கான தேசிய மாணவர் படை (என்.சி.சி) குடியரசு தின முகாமைக் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் டெல்லியில் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், ராணுவம், கப்பற்படை, விமானப்படை ஆகிய மூன்று பிரிவுகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட என். சி.சி பயிற்சியாளர்கள் தொகுப்பு குடியரசு துணைத் தலைவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கியது.
குடியரசு துணைத்தலைவரும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். என்.சி.சி மாணவர்களிடையே உரையாற்றிய ஜக்தீப் தன்கர், “இளம் மாணவர்களிடையே பண்பு, தோழமை மற்றும் தன்னலமற்ற சேவை உணர்வை வளர்ப்பதன் மூலம் தேசக் கட்டமைப்பில் என்.சி.சியின் பங்களிப்பு முக்கியமானது. என்.சி.சி, பல ஆண்டு காலமாக, வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக பணியாற்றுகின்ற, உந்துதல் மற்றும் ஒழுக்கமுள்ளஇளைஞர்களிடையே உண்மையான, துடிப்பானமற்றும் பன்முகத் தன்மைகொண்ட பணியாளர்களை உ உருவாக்கியுள்ளது. உலகின் மிகப்பெரிய இளைஞர் அமைப்பான என்.சி.சிக்கு, குறிப்பாக அமிர்தகாலத்தின் கடமைப் பாதையில் நடைபோடும் பயிற்சி யாளர்களுக்கு எப்போதும் போற்றப்பட வேண்டிய தருணமாக இருக்கும்” என தெரிவித்தார். பின்னர், அண்மையில் புதுப்பிக்கப் பட்ட “ஹால் ஆஃப் ஃபேம்” எனும் புகழ்பெற்றோரை கௌர விக்கும் காட்சிக்கூடம் மற்றும் பயிற்சிப் பகுதியை ஜக்தீப் தன்கர் பார்வியிட்டார். அங்கு இளம் பயிற்சியாளர்கள் தங்கள் மாநிலங் களைப் பற்றி அளித்த விளக்கத்தையும் கேட்டறிந்தார். பயிற்சிப் பகுதி களில் அவர்களால் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பல்வேறு சமூக கருப்பொருள்களைப் பார்வியிட்டு பாராட்டினார். குடியரசு துணைத் தலைவருக்கு என்.சி.சி முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர் பதவியை என்.சி.சி தலைமை இயக்குனர் லெப்டினன்ட் * ஜெனரல் குர்பீர்பால் சிங் வழங்கினார். முன்னதாக, தேசிய மாணவர் படையின் 74வது குடியரசு தின முகாம், 2023 ஜனவரி 02 அன்று டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் தொடங்கியது. இந்த ஒரு மாதகால முகாமில் 28மாநிலங் கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களிலிருந்து 710 பெண்கள் உட்பட மொத்தம் 2,155 மாணவர்கள் பங்கேற்கின்றுள்ளனர். மேலும், இளைஞர் பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக 19 நட்பு நாடுகளைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளும் இந்த முகாமில் பங்கேற்றுள்ளனர். 26 ஜனவரி 2023 அன்று குடியரசுதின அணிவகுப்பில் இரண்டு என்.சி.சி அணிவகுப்பு குழுக்கள் பங்கேற்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here