அல் கொய்தா மிரட்டல்

0
171

அல் கொய்தா பயங்கரவாத அமைப்பு, அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோவிலை இடித்துவிட்டு அதற்குப் பதிலாக மசூதியை அமைக்கும் என்று தனது இதழான கஸ்வா இ ஹிந்தின் சமீபத்திய இதழில் சபதம் செய்துள்ளது. இந்த ஜிஹாதி குழுவால் இந்த வாரம் ஆன்லைனில் வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தியில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரையும் இதில் குறிப்பிட்டு, அதன் அறிவுரைகளை “பாகிஸ்தான் ஸ்தாபனத்தின் பிரச்சாரம்” என்று நிராகரிக்க வேண்டாம் என்று அவர்களை எச்சரித்தது மேலும் ஜிஹாதை ஆதரிக்க பரதத்தை முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதில், “பாபர் மசூதியின் இடிபாடுகளில் ஸ்ரீராமர் கோயில் கட்டப்படுவது போல், அது இடிக்கப்படும், மேலும் அல்லாஹ்வின் பெயரால் சிலைகள் இருக்கும் இடத்தில் பாபர் மசூதி மீண்டும் கட்டப்படும். இவை அனைத்தும் தியாகத்தை கோருகின்றன. இந்த காரணத்தால் பொருள் இழப்புகளுக்கு பயப்பட வேண்டாம். இந்த உயிரும், உடமையும் ஜிஹாத்துக்குப் பயன்படுத்தப்பட்டிருந்தால், இவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்காது. பாரதத்தின் முஸ்லிம்களுக்கு மதச்சார்பின்மை என்பது ஒரு நரகம். ஹிந்து முஸ்லிம் சகோதரத்துவத்தின் முழக்கங்கள் எல்லாம் ஒரு புரளி” என்று வலியுறுத்தியது. மேலும், பாரத துணைக் கண்டம் முழுவதும் இஸ்லாம் உலகத்தின் ஒரு பகுதியாக மாறும், அங்குள்ள சிலை வழிபாட்டை நிறுத்தும். ஸ்ரீநகரில் உள்ள ஜாமியா மஸ்ஜித் முதல் பாபர் மசூதி வரை, ஜிஹாத் தான் தீர்வு” என பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் தலையங்க கட்டுரையை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here