இலங்கைக்கு உதவும் பாரதம்

0
128

இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. பல உலக நாடுகள் அதற்கு சிறிய அளவில் ஆதரவுக்கரம் நீட்டின, சீனா இந்த சூழலை பயன்படுத்தி இலங்கையை அதன் வலையில் வீழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால், பாரதம் மட்டுமே இலங்கைக்கு இன்றுவரை சகோதர பாசத்துடன் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. பாரதம், கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 32 ஆயிரத்து 800 கோடி ரூபாய் நிதியை இலங்கை மக்களின் வாழ்வாதாரத்திற்கு தந்துதவியது. கடந்த ஜனவரியில் இலங்கையின் அன்னியச்செலாவணி கையிருப்பை அதிகரித்து அதன் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 7,380 கோடியை எளிய கடன் திட்ட உதவியாக அறிவித்தது. மேலும், எரிபொருள் வாங்குவதற்காக சுமார் ரூ. 5,740 கோடி நிதி உதவியை அளித்தது. இப்படி இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு கரம் நீட்டி வரும் பாரதம், அங்கு பொது போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில், தற்போது 75புதியபேருந்துகளை வழங்கியுள்ளது. இலங்கைக்கான பாரதத் தூதர் இலங்கை போக்குவரத்து வாரியத்திடம் இந்த பேருந்துகளை வழங்கினார்.India provides 75 buses to Sri Lanka to support public transport system |  The Financial Express

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here