பகவான் தாஸ் ஜனவரி 12, 1869 ல் வாரணாசியில் பிறந்தார். ஓர் இந்திய இறை மெய்யியலாளர் மற்றும் அரசியல்வாதி. பிரித்தானிய இந்தியாவில் நடுவண் சட்டப் பேரவையில் அங்கத்தினராக இருந்தவர்.
பிரிட்டிஷ் அரசு இந்தியாவிற்கு விடுதலை வழங்க வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டால், பலமுறை ஆங்கிலேய அரசின் கொடுமைகளுக்கு ஆளானார்.
1894ஆம் ஆண்டில் அன்னி பெசண்ட்டின் பேச்சால் கவரப்பட்டு இறை மெய்யியல் சங்கத்தில் இணைந்தார். ஒத்துழையாமை இயக்கத்தின்போது காங்கிரசில் இணைந்து இந்திய விடுதலைக்குப் பாடுபட்டார். 1955ஆம் ஆண்டில் இவரது சிறந்த தேசியப் பணிக்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.