காசாபா தாதாசாகேப் ஜாதவ்

0
1692

1. காசாபா தாதாசாகேப் ஜாதவ் ஜனவரி 15, 1926 ல் பிறந்தார். தனிநபர் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற இந்தியர்.
2. இவர் 1952 ஆண்டு ஹெல்சிங்கியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மற்போர் விளையாட்டில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
3. 1996 ஆண்டு லியாண்டர் பயஸ் டென்னிசில் வெண்கலப் பதக்கத்தைப் பெறும் வரை இதுவே இந்தியர்களின் ஒரே தனிநபர் பதக்கம். இவர் ஒரு விளையாட்டு வீரர் ஆக இந்தியாவுக்கு பெருமை சேர்த்தாலும், இவரின்
இறுதிக் காலம் வறுமையிலே முடிந்தது.
4. புதுதில்லியில் புனரமைக்கப்பட்ட இந்திரா காந்தி உள்விளையாட்டரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மல்யுத்த வளாகத்துக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
5. 1993ம் ஆண்டில் மகாராஷ்டிரா அரசு இவருக்கு சிவ் சத்ரபதி விருது வழங்கி கௌரவித்தது. 2001ம் ஆண்டில் இவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது. இரண்டுமே இவர் இறந்த பின்னர் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here