சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு

0
226

பாகிஸ்தானை  சேர்ந்த பயங்கரவாதி அப்துல் ரஹ்மான் மக்கியை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. இவர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவரும் மும்பை பயங்கரவாத தாக்குதல் உட்பட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமானவருமான ஹஃபீஸ் சயீத்தின் மைத்துனர். அப்துல் ரஹ்மான் மக்கியை ஏற்கெனவே நமது நாடும் அமெரிக்காவும் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. இவர், பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பது, நிதி திரட்டுவது, இளைஞர்கள் மத்தியில் உரையாற்றி அவர்களை மூளைச்சலவை செய்வது, அவர்களை தாக்குதலுக்கு தயாராக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு தேவையான நிதி ஆதாரங்களையும் திரட்டுவதில் முக்கியப் பங்காற்றி வருகிறார். எப்.ஏ.டி.எப் அமைப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதியுதவிகளை தடுக்கும் விதமாக அதனை சாம்பல் பட்டியலில் வைத்தது. இதனால், வேறு வழியின்றி 2020ல் பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்புக் குழு மக்கியை குற்றவாளி என அறிவித்து சிறைத் தண்டனை விதித்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்கனவே அப்துல் ரஹ்மான் மக்கிகியை சர்வதேச பயங்கரவாதியை அறிவித்தாலும் கூட சீன பல தருணங்களில் அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. எனினும் இப்போது மக்கியை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here