வஜ்ரா பிரங்கிகளை வாங்கும் தரைப்படை

0
164

இந்திய தரைப்படை ஏற்கனவே நூறு கே 9 வஜ்ரா தானியங்கி பிரங்கிகளை பயன்படுத்தி வரும் நிலையில் மீண்டும் இத்தகைய 100 பிரங்கிகளை வாங்க விரும்பி திட்டமிட்டுள்ளது. தற்போது அதற்கான பணிகளை இந்திய தரைப்படை துவங்கி உள்ளது. இந்த 100 பிரங்கிகளை லடாக்கில் களம் இறக்க உள்ளதால், வீரர்களுக்கான குளிர் தாங்கும் வசதிகளுடன் இவை தயாரிக்கப்பட உள்ளன. இதனையடுத்து இவற்றை இந்தியாவில் இந்தவகை பீரங்கிகளை தயாரிக்கும் எல்&டி நிறுவனம், குளிர்கால அமைப்புகளுக்கான தொழில்நுட்பத்தை தருமாறு தென் கொரியாவின் ஹான்வாஹா டிபன்ஸ் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த இரண்டாம் தொகுதி பிரங்கிகள், மிக அதிக உயரத்தில், அதிக குளிரில் குறிப்பாக மைனஸ் தட்பவெப்ப நிலைக்கு கீழான சூழலிலும்கூட தங்கு தடையின்றி செயல்படும் வகையில் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக வடகிழக்கு மாநிலங்களை பாரதத்தின் முக்கிய மாநிலங்களுடன் இணைக்கும் பாரத எல்லைப் பகுதிகளில் உள்ள மிகவும் சிக்கலான பலவீனமான நிலப்பரப்பான சிக்கன் நெக் காரிடார் பகுதியில் மேலும் 100 வஜ்ரா பிரங்கிகளை வாங்கி களமிக்க இந்திய தரைப்படை விரும்புகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here