ஹெச்.எஸ்.எஸ் அமைப்புக்கு எம்.எல்.கே தலைமைத்துவ விருது

0
241

அமெரிக்காவில் உள்ள ஹிந்து ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஹெச்.எஸ்.எஸ்) இளைஞர்களின் தன்னார்வ சேவைகளை அங்கீகரிக்கும் வகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்களுக்கு ‘2023 தன்னலமில்லா சேவைக்கான மார்ட்டின் லூதர் கிங் (எம்.எல்.கே) இளைஞர் தலைமைத்துவ விருது’ வழங்கப்பட்டது. அரோரா நகர மேயர் ரிச்சர்ட் இர்வின், இந்த விருதை வழங்கினார், இந்த விருது, இளைஞர் குழுக்கள் மற்றும் இளைஞர் தலைவர்களுக்கு அவர்களின் சமூக சேவை, பன்முகத்தன்மை, பங்களிப்பு, இணைந்த செயல்பாடுகள் ஊக்குவிப்பு முயற்சிகளுக்காக வழங்கப்படுகிறது. கடந்த 2022ல் ஹெச்.எஸ்.எஸ் இளைஞர்கள் தங்கள் உணவு இயக்கங்கள், நெடுஞ்சாலைகளை சுத்தம் செய்தல், கலாச்சார கல்வி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முதல் பதிலளிப்பவர்களை கௌரவித்தல் மற்றும் பிற சேவை நடவடிக்கைகளுக்காக இந்த விருதைப் பெற்றுள்ளனர். விருதைப் பெற்ற ஹெச்.எஸ்.எஸ் இளைஞர்கள், இந்த விருது சமூகத்தின் ஒரு அங்கமாக இருப்பதற்கான அங்கீகாரம் மட்டுமே என்றும், மார்ட்டின் லூதர் கிங் கூறியது போல், “நாம் அனைவரும் வெவ்வேறு கப்பல்களில் வந்திருக்கலாம், ஆனால் நாங்கள் இப்போது ஒரே படகில் இருக்கிறோம்” என்றும் விருதை விட சமுதாயத்திற்கு சேவை செய்வதே நிறைவானது என்றும் குறிப்பிட்டனர். இதற்கிடையில், கலிபோர்னியாவின் ரோஸ்வில்லே மற்றும் ராக்லின் எஸ்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள், உள்ளூர் சமூகத்தினர் மற்றும் சமூகத் தலைவர்களுடன் மார்ட்டின் லூதர் கிங் தினத்தை கொண்டாடினர். அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் சுத்தம் செய்வதில் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு உதவியும் செய்தனர். இண்டியானாபோலிஸில் உள்ள செயின்ட் ஜான்ஸ் மிஷனரி பாப்டிஸ்ட் சர்ச்சில், 54வது மார்ட்டின் லூதர் கிங் தின கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு ஹிந்து சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ஹெஸ்.எஸ்.எஸ் உறுப்பினர் ஜே ஆர் சண்டாடி, இந்தியானா கிறிஸ்தவ தலைமைத்துவ மாநாட்டால் அழைக்கப்பட்டார். சாண்டி, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியருக்கு தனது நன்றியைத் தெரிவித்து இந்நிகழ்வில் பேசினார். பின்னர், அனைவருக்கும் அமைதி மற்றும் ஒற்றுமைக்கான ஹிந்து பிரார்த்தனை பாடலை நிகழ்ச்சியில் பாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here