ஹைதராபாத் கடைசி நிஜாம் முக்காரம் ஜாவின் இறுதி ஊர்வலத்தை அரசு மரியாதையுடன் நடத்த தெலுங்கானா மாநில அரசு முடிவு செய்ததற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வி.ஹெச்.பி தலைவர் பாலசாமி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “தெலுங்கானா சுதந்திரம் அடைந்த பிறகு முக்காராமின் இறுதிச் சடங்கை அரசு மரியாதையுடன் நடத்த தெலுங்கானா அரசு முடிவு செய்ததை வி.ஹெச்.பி கண்டிக்கிறது. அவர் துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் தான் இதுவரை வசித்து வந்தார். அவர் பாரதக் குடியுரிமை பெற்றவரா இல்லையா என்பது கூட தெளிவாகத் தெரியவில்லை. இந்த நடவடிக்கை, தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்) தலைமையிலான மாநில அரசின் தெளிவான ஹிந்து விரோத செயல்திட்டம். இதெல்லாம் வாக்கு வங்கிக்காக மட்டுமே செய்யப்படுகிறது. மாநிலத்தில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காக ஒவைசி சொல்வதையெல்லாம் கே.சி.ஆர் செயல்படுத்தி வருகிறார்” என்று கூறினார்.