மரபுகளை நிலைநிறுத்தும் குடும்ப அமைப்பு

0
147

கேரளாவை சேர்ந்த ஆர்.எஸ். எஸ் அமைப்பினர், மறைந்த மூத்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகரும் வித்யா பாரதியின் கேரளப் பிரிவான பாரதிய வித்யா நிகேதனின் நிறுவனருமான பாஸ்கர்ஜி என் அன்புடன் அழைக்கப்பட்ட ஏ.வி பாஸ்கரனின் பிறந்தநாளை அனுசரித்தனர். இதில், சென்னையைச் சேர்ந்த பிரபல துக்ளக் ஆசிரியர் மற்றும் கட்டுரையாளரான எஸ். குருமூர்த்தி சிறப்புரையாற்றினார். பாஸ்கர்ஜி நினைவு மாநாடு மற்றும் “உலகளாவிய போட்டியின் உலகில் பண்டைய ஞானத்தின் பொருத்தம்” என்ற கருத்தரங்கை அவர் தொடங்கி வைத்தார். இதில் பேசிய அவர், “அனைத்து வகையான கலாச்சார படையெடுப்புகள் மற்றும் பயங்கரவாத இயக்க செயல்பாடுகளுக்கு மத்தியில் பாரதம் உயிர்புடன் உள்ளது. இதற்கு காரணம் நமது வளமான கலாச்சார விழுமியங்கள் தான்.

நமது நாட்டில் 807,000 கிராமங்கள் உள்ளன, ஆனால், காவல் நிலையங்களின் எண்ணிக்கை 12,800 தான். அப்படியெனில் நமது நாட்டு மக்களை யார் பாதுகாப்பது ? அது நமது கலாச்சார மதிப்புகள் தவிர வேறு எதுவும் இல்லை. வெளிநாட்டினர் அவற்றை தகர்க்க தங்களால் இயன்றவரை முயன்றனர். ஆனால், அவர்களால் ஓரளவு மட்டுமே அதில் வெற்றி பெற முடிந்தது. நாம் நமது விழுமியங்களை மேலும் வளர்த்துக் கொண்டால், நம் நாடு உலகின் தலைசிறந்த நாடாகும். வளர்ச்சிக்கான நவீன வரையறையில் ‘பழைய மதிப்புகளை கைவிடுவதற்கான அழைப்பு’ அடங்கும். நமது குடும்ப அமைப்பும், பெண் சக்தியும் நமது கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் மரபுகளை நிலைநிறுத்துகிறது. நமது குடும்ப அமைப்பு எப்போதும் செல்வத்தை சேமிப்பதில் நிற்கிறது. உலகில் உள்ள மொத்த தங்க இருப்பில் 40 சதவீதம் நம் நாட்டு மக்களிடம் உள்ளது. 16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் பாரதம் உலகப் பொருளாதாரத்தில் முதலிடத்தில் இருந்தது. அடுத்ததாக சீனா இருந்தது. 17ம் நூற்றாண்டின் இறுதியில்சீனா முதலிடத்தை பாரதம் 2ம் இடத்தை அடைந்தது. 18ம் நூற்றாண்டில், பாரதம் தனது அனைத்து பெருமைகளையும் இழந்தது. காரணம், அந்நிய படையெடுப்பு, அவர்களின் ஆட்சி மற்றும் செல்வாக்கின் காரணமாக மதிப்புகளை இழந்தோம். ஐரோப்பிய சக்திகள் அமெரிக்காவிற்குள் நுழைந்தபோது 20 மில்லியன் பூர்வீகவாசிகளை ஒழித்துவிட்டதாக வரலாறு கூறுகிறது. வளர்ச்சியை அடைவதற்கான வெளிநாட்டு முறை இது. ஆனால், நமது நாடு மனித விழுமியங்களை வளர்த்தது” என்றார்.

பாஸ்கர்ஜியால் நிறுவப்பட்ட லட்சுமி பாய் தர்மபிரகாஷன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், அவரது ஆன்மீக சீடருமான எம். மோகன் பாஸ்கர்ஜியின் அர்ப்பணிப்பு வாழ்க்கை குறித்து பேசினார். எம்.மோகன் எழுதிய பாஸ்கர்ஜியின் வாழ்க்கை வரலாற்றை எஸ்.குருமூர்த்தி வெளியிட்டார். சீமா ஜாகரன் மஞ்ச் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஏ.கோபாலகிருஷ்ணன், லட்சுமி பாய் தர்மப்பிரகாஷன் அறங்காவலர் பேராசிரியர் ஆர். சசிதரன், வித்யா நிகேதன் மாநில பொதுச் செயலர் ஆர்.வி. ஜெயக்குமார் உள்ளிட்டோரும் இதில் உரையாற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here