குடியரசு தினம்

0
143

நமது சுதந்திர பாரதத்தின் 74வது குடியரசு தின விழா இன்று தேசமெங்கும் கொண்டாடப்படுகிறது. தாய்த்திரு நாட்டிற்காக தம்மையே அர்ப்பணித்த தேசத் தலைவர்கள், புரட்சியாளர்கள் என்று பலரும் பாடுபட்டு, தமது குருதி சிந்தி, ஆங்கிலேய அடிமை ஆட்சியை முறியடித்து, 1947 ஆகஸ்ட் 15ல் நமக்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்தனர்.

ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு நாள். மக்களால் மக்களுக்காக என்பதே நமது பாரதக் குடியரசின் கோட்பாடு. தேசவிடுதலைக்குப் பிறகு நமக்கென்று தனிப்பட்ட சட்ட திட்டங்கள், அரசியல் அமைப்பு போன்றவை இல்லாமல் இருந்தது. ஆங்கிலஅரசாங்கம் என்ன சட்டம் இயற்றியதோ அதன் வழியே நாம் சென்றோம். இக்கவலைத் தீர்க்கும் பொருட்டு, அரசியல் நிர்ணய சபையை உருவாக்கப்பட்டது. அக்குழுவின் யோசனையின் பேரில் நமக்கென ஒரு அரசியல் சாசனம் உருவாக்கும் பணியைடாக்டர் அம்பேத்கர் தலைமையிலான குழு தொடங்கியது.

2 வருடம் 11 மாதம் 18 நாளில் அப்பணியை முடித்து, 1950 ஜனவரி 24 அன்று அந்த அரசியல் சாசனத்தை நாடாளுமன்றத்தில் ஒப்படைத்தது. அன்றுதான் அரசியல் நிர்ணய சபையின் தலைமையில் குடியரசுத் தலைவருக்கான போட்டியும் நடந்தது. அதிலும் டாக்டர் ராஜேந்திர பிரசாத் முதல் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார். அவரின் ஒப்புதலுக்கு இணங்க ஜனவரி 26ம் நாள் நமக்கான அரசியல் சாசனம் உருவானது. அன்றைய தினமே நம் நாட்டின் குடியரசு தினம் என்று அனைவராலும் போற்றப்பட்டது.

சும்மாவா வந்தது நமது பாரதத்துக்கு சுதந்திரமும் குடியரசு அமைப்பும்? ஒன்றுபட்டிருக்கும் அகண்ட பாரதத்தின் முன்னேற்றத்தில் அக்கறைகொண்டு இவற்றைப் பேணிக்காப்பதே நமது மூச்சும் செயலுமாகவும் இருக்கவேண்டும் என்று அனைவரும் இந்த குடியரசு நன்னாளில் சூளுரைப்போம்.

ஆர். கிருஷ்ணமூர்த்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here