வேலைகளை உருவாக்கும் பாரத இளைஞர்கள்

0
145

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் ஒரு பிரிவான ‘ஸ்டார்ட்அப் 20’ குழுவின் தொடக்கக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, மத்திய இணையமைச்சர் சோம் பிரகாஷ், ஜி20 மாநாட்டின் தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரி அமிதாப் காந்த், நிதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி பரமேஸ்வரன் ஐயர், அமைச்சக அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஜி20 நாடுகளில் இருந்து வந்த அவற்றின் பிரதிநிதிகள், பார்வையாளர் நாடுகளின் சிறப்பு அழைப்பாளர்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், உலகளாவிய மற்றும் பாரத ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ‘2047ம் ஆண்டுக்கான அமிர்த காலப் புதுமை’ என்ற கருப்பொருளில் உரையாற்றிய கிஷன் ரெட்டி, “பாரதம் வளமான பாரம்பரிய கலாச்சாரத்தின் தாயகம். இங்கு வரும் ஜி20 பிரதிநிதிகள் இங்கு தங்கியிருக்கும்போது அவர்கள் இந்த பாரம்பரிய கலாச்சாரத்தின் முழுமையான அனுபவத்தைப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பாரதத்தின் தலைமையின் கீழ் ஜி20 அமைப்பு, கூட்டு ஒத்துழைப்பு மற்றும் பொறுப்புகளுடன் செயல்பட்டு வெற்றிகளை அடைவது, அவற்றை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்வது என்ற நோக்கில் செயலாற்றுகிறது. பாரதத்தில் 350 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 100க்கும் அதிகமான யூனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன. இவற்ருடன் சேர்த்து சுமார் 85,000 பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பாரதத்தில் தற்போது உள்ளன. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூலம், பாரதத்தின் இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலைகளை உருவாக்குபவர்களாக மாற விரும்புகின்றனர். புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தொழில் சூழல் அமைப்பை வளர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் பாரதம் 41 இடங்கள் முன்னேறியதற்கு மத்திய அரசின் இந்தஇடைவிடாத சீரிய முயற்சிகளே காரணம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here