சனாதன் தர்ம ஸ்வயம்சேவக சங்க வகுப்புகள்

0
185

சனாதன் தர்ம ஸ்வயம்சேவக சங்கம் (எஸ்.டி.எஸ்.எஸ்) மியான்மர், ஒவ்வொரு ஆண்டும் குளிர்கால முகாம்களை நடத்துகிறது. மியான்மரில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, இந்த ஆண்டு நாடு முழுவதும் காரியகர்த்தா வகுப்பு மற்றும் ‘சன்ஸ்கார் சாதனா வர்க’ வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அவ்வகையில், இரண்டு காரியகர்த்தா வகுப்புகளும் ஐந்து சன்ஸ்கார் சாதன வர்காவும் நடத்தப்பட்டன. சுமார் 25 நகரங்கள் மற்றும் 40 கிராமங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர். அவற்றில் 150க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள், 350 இளைஞர்கள், 100 பெரியவர்கள், மற்றும் 25 பெண்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. காரியகர்த்தா வகுப்புகளில் ஒரு பயனுள்ள ஷாகாவை நடத்துவதற்குத் தேவையான திறன்கள் மற்றும் புரிதலை வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டது. நாட்டில் நிலவும் பாதகமான சூழ்நிலைகளால் ஷாகாக்கள் நிறுத்தப்பட்ட இடங்களில் மீண்டும் தொடர்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ‘சன்ஸ்கார் சாதனா வர்க’ நடத்தப்பட்டது. நாள் முழுவதும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கதைசொல்லல், ஸ்லோகங்கள் சொல்வது, விளையாட்டுகள் மற்றும் ஹிந்து தர்மத்தின் பண்புகள் பற்றிய பேச்சு உள்ளிட்டவை இடம்பெற்றன. இதைத்தவிர கடந்த ஜனவரி 4ம் தேதி மியான்மரின் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற தூய்மைப் பணியில் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். வடக்கு ஒக்கலாபா டவுன்ஷிப்பில் உள்ள யேவே ஹிந்து மயான பூமி மற்றும் யாங்கூன் கியாக்டகா டவுன்ஷிப்பில் உள்ள ஒரு கோயில் ஆகியவற்றில் இந்த தூய்மைப்படுத்தும் இயக்கங்கள் நடத்தப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here