352 வது நினைவு தினம்:
கோன்டானா கோட்டையில் காவிக் கொடி பட்டொளி வீசிப்பறக்க தன்னுயிர் ஈந்தவர் தளபதி தானாஜி மால்சுரே. அவ்வீரனின் தியாகத்தைப் போற்றிடுவோம்.
பெயரளவில் மட்டும் தளபதி அல்ல!
தளபதி எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய சீறிய சிங்கம்.
சிம்ஹகட் கோட்டை. புனேக்கு அருகில் உள்ள முக்கியத்துவம் கொண்ட கோட்டை.
1670 பிப்ரவரி 4 ஆம் தேதியன்று இக்கோட்டையைக் கைப்பற்றிட எதிரியின் படைகள் சூழ்ந்தன.
இப்போரினை எதிர் கொள்ள தகுதி வாய்ந்த வீரன் என சத்ரபதி சிவாஜி தேர்ந்தெடுத்து அனுப்பியது தளபதி தானாஜி மால்சுரே என்ற சிங்கத்தை.
சிலருக்கு முடியாதது என்ற ஒன்று கிடையவே கிடையாது. எதையும் செய்து சாதிக்கக் கூடிய அருந்திறன் ஆற்றல்கள் படைத்தவர்கள்.அம்மாதிரி திறன்கள் அனைத்தையும் கொண்டிருந்தவர் மால்சுரே.
கடுமையான போர். போரில் எதிரியை வீழ்த்தி கோட்டையை மீட்டு சிவாஜியின் காலடியில் சமர்ப்பித்த வெற்றி வீரர்.
கோட்டை கிடைத்தது. ஆனால்
சிம்மம் அமர நிலையை எய்தியது.
தானாஜி மால்சுரேவின் தியாகம் நம் அனைவருக்கும் பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்திடும்.
சத்ரபதி சிவாஜியின் வரலாற்றில் இக்கோட்டையை மீட்க நடைபெற்ற வீரப்போர் என்றென்றும் சரித்திரத்தில் நிலைத்து நிற்கும்.