தென்கொரியாவின் சங்வால் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள பாதயாத்திரையின் ஒரு பகுதியாக கொரியாவிலிருந்து 108 புத்த மதத்தினர் 43 நாட்களில் 1,100 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபயணமாக இந்தியாவுக்கு யாத்திரை வருகின்றனர் என்று தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சக செயலாளர் திரு அபூர்வ சந்திரா இன்று அறிவித்தார். இந்தியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே தூதரக உறவு ஏற்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் தருணத்தில் இது முக்கியத்துவம் பெற்றுள்ளதாகக் கூறினார். இரு நாடுகளுக்கு இடையே நட்புறவு மற்றும் ஒருங்கிணைப்பை அதிகரிப்பதை யாத்ரீகர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள புத்த மத தலங்களுக்கு சென்று பார்வையிட்டு அதன் பின்னர் நேபாளம் செல்ல உள்ளதாக கூறினார்.
இந்தியாவில் உள்ள புத்த மத சுற்றுலாத் தலங்களை உலக அளவில் எடுத்து செல்ல வேண்டும் என்பது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை என்று திரு சந்திரா மேலும் தெரிவித்தார்.
இந்தியா, நேபாள நாடுகளில் பிப்ரவரி 9 முதல் மார்ச் 23, 2023 வரை 43 நாட்கள் அவர்கள் சுற்றுலாப் பயணத்தில் ஈடுபட உள்ளனர்.