தடைசெய்யப்பட்ட தீவிர மதவாத அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் (பி.எப்.ஐ) நோக்கங்கள் தொடர்பான முக்கியத் தகவல்களை கொண்ட ‘365 நாட்கள்: ஆயிரம் வெட்டுக்கள் மூலம்’ என்ற புத்தகத்தை மகாராஷ்டிர மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏ.டி.எஸ்) சமீபத்தில் கைப்பற்றியது. இது தொடர்பாக பி.எப்.ஐயின் ஐந்து உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். 2047க்குள் பாரதத்தை ஒரு முஸ்லிம் நாடாக மாற்றும் பயங்கரமான இலக்கை இந்த அமைப்பு கொண்டுள்ளது. 2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்து தற்போதுள்ள அரசியல் சூழல் முஸ்லிம் மதத்திற்கு சாதகமற்றதாக போலியாக சித்தரித்து பாரதத்தில் உள்ள முஸ்லிம் சமூகத்தை மூளைச் சலவை செய்வதை நோக்கமாகக் கொண்ட இந்த புத்தகம், கைது செய்யப்பட்ட முஸ்லிம் மத அடிப்படைவாத அமைப்பான பி.எப்.ஐ’யின் உறுப்பினர் ஒருவரின் அலைபேசியிலிருந்து மீட்கப்பட்டதாக ஏ.டி.எஸ் குற்றப்பத்திரிகை கூறுகிறது.
இந்த புத்தகத்தில் ஹிந்துக்கள் மீதான வெறுப்புனர்வை தூண்டும் பல வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன மற்றும் 2002 குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தில் பிரதமர் மோடியின் பங்கு இருந்ததாக கூறி பல பொய்யாக கருத்துகள் புனையப்பட்டுள்ளன. 2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்து தற்போதுள்ள அரசியல் சூழல் முஸ்லிம் மதத்திற்கு சாதகமற்றதாக போலியாக சித்தரித்து பாரதத்தில் உள்ள முஸ்லிம் சமூகத்தை மூளைச் சலவை செய்வதை நோக்கமாகக் கொண்ட இந்த புத்தகம், கைது செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவரின் அலைபேசியிலிருந்து மீட்கப்பட்டதாக ஏ.டி.எஸ் குற்றப்பத்திரிகை கூறுகிறது. இந்த புத்தகத்தில் ஹிந்துக்கள் மீதான வெறுப்புணர்வை தூண்டும் பல வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. குஜராத் மாநிலத்தில் 2002ல் நடந்த கலவரத்தில், பிரதமர் மோடியின் பங்கு இருந்ததாக கூறி பல பொய்யான கருத்துகள் புனையப்பட்டுள்ளன.
அந்த குற்றப்பத்திரிகையில், கைது செய்யப்பட்ட பி.எப்.ஐ உறுப்பினர்கள் பாரதத்தை முஸ்லிம் நாடாக மாற்றுவதற்கான நீண்டகாலத் திட்டத்தைக் கொண்டிருந்தனர். இளைஞர்களை பயங்கரவாதிகளாக மாற்றுவதற்காக மகாராஷ்டிராவில் பல மாவட்டங்களில் கூட்டங்களை ஏற்பாடு செய்தனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஹிந்துக்களுக்கு எதிரான வெறுப்பை பரப்பும் முயற்சியில், முஸ்லிம் இளைஞர்கள் மீது செல்வாக்கு செலுத்தும் முயற்சியாக, இதில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் சாத்வி நிரஞ்சனா ஜோதி உள்ளிட்ட பிற ஹிந்து தலைவர்களையும் புத்தகம் குறிப்பிடுகிறது. பி.எப்.ஐ அமைப்பின் அரசியல் முகமாக கருதப்படும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியும் (எஸ்.டி.பி.ஐ) இந்த புத்தகத்தின் வெளியீட்டாளராக இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அக்கட்சி இதனை மறுக்கிறது என்றாலும் இது அதன் தொடர்புகளை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது என மக்கள் கருதுகின்றனர். இதனிடையே, சமீபத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ), பீகார் காவல்துறையுடன் இணைந்து, பீகார் மாநிலம் மோதிஹாரியில் உள்ள குவா கிராமத்தில் விரிவான சோதனையை நடத்தியது. இதில், மூன்று பி.எப்.ஐ உறுப்பினர்கள் உட்பட 8 பேரைக் கைது செய்து காவலில் எடுத்துள்ளது.