இதுதான் திராவிட மாடலா?

0
145

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள சமூக ஊடக அறிக்கையில், “சென்னையில் ஆயுதப்படைக் காவலர் விஜயன் ரௌடிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. திராவிட மாடல் என்று சந்து, பொந்தெல்லாம் முழங்கிடும் ஸ்டாலின் தலைமையிலான விளம்பர ஆட்சியில், காவல்துறைக்கே பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. தி.மு.க எப்பொழுதெல்லாம் ஆட்சிக் கட்டிலில் ஏறுகிறதோ, அப்போதெல்லாம் ரௌடிகள், கேடிகள், கடத்தல் கும்பல்கள் சுதந்திரமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்களை சர்வ சாதாரணமாக செய்து வருகின்றனர். அந்த வழியிலேயே இன்று ஆயுதப்படை காவலரும் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் கையாளும் காவல்துறையின் கதி இது. தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆயுதப்படை காவலரின் மரணத்துக்கு பொறுப்பேற்று பதில் சொல்லவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here