பல சட்டப் போராட்டங்கள், பல வெட்டுகளுக்குப் பிறகு, பாரத வரலாற்றில் கறைபடிந்த 1921 மலபார் ஹிந்து இனப்படுகொலை என்ற இருண்ட அத்தியாயத்தை மையமாக வைத்து இயக்குனர் ராமசிம்மன் (தாய்மதம் திரும்பும் முன் அவரது பெயர் அலி அக்பர்) இயக்கியுள்ள மலையாளத் திரைப்படம் ‘புழ முதல் புழ வரே’ என்ற திரைப்படத்திற்கு வெற்றிகரமாக சி.பி.எப்.சி சான்றிதழ் கிடைத்துள்ளது. இதன் மூலம் படம் திரையிட தயாராக உள்ளது. முன்னதாக, கேரளாவில் ஆளும் கட்சியின் கீழ் உள்ள மலையாளத் திரைப்படத் தணிக்கைக் குழு, இந்த மலையாளத் திரைப்படத்திற்குச் சான்றிதழை அளிக்க மறுத்துவிட்டது. அதைத் தொடர்ந்து திரைப்பட இயக்குனர் இந்த படத்தை சி.பி.எப்.சி மறுஆய்வுக்காகப் பரிந்துரைத்தபோது, படத்தில் பல காட்சிகள் வெட்டப்பட்டன. எனினும், தற்போது மலபார் ஹிந்து இனப்படுகொலை குறித்த இந்த படத்திற்கு சி.பி.எப்.சி சான்றிதழ் கிடைத்துள்ளதால் கேரள கம்யூனிச அரசின் கேவலமான அரசியல் தோல்வியடைந்துள்ளது என்றே கருதப்படுகிறது. இந்த படம் தயாரிப்பதாக செய்தி வெளியானதில் இருந்து இயக்குனருக்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்தப் படத்துக்கு தயாரிப்பாளர் என தனியாக யாரும் இல்லை. இத்திரைப்பட தயாரிப்பு குறித்து ராமசிம்மனின் முகநூல் பதிவைப் பார்த்த பொதுமக்கள் சிறுக சிறுக அளித்த நன்கொடைகள் மூலம் ரூ.1.7 கோடி கிடைத்தது. சில ஸ்பான்சர்கள் ஆடைகளை நன்கொடையாக வழங்கினர், சங்க பரிவாரத்தை சேர்ந்தவர்கள் அவருக்கு காக்கி உடைகளை வழங்கினர். துணை நடிகர்களாக நடித்த பலர் சம்பளமாக ஒரு பைசா கூட வாங்கவில்லை. இப்படியாக படம் வளர்ந்தது. நிதியுதவி, ஸ்பான்சர்கள், உடை, அலங்கார உதவிகள் என கிடைத்த சுமார் ஐந்து கோடி ரூபாயில் படம் தயாரிக்கப்பட்டது என்று இயக்குனர் கூறினார். ஆர்.எஸ்.எஸ் மூத்தத் தலைவர் ஜே நந்தகுமார் இதுகுறித்த செய்திகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். “இறுதியாக சான்றிதழ் கிடைத்தது” என்று டுவீட் செய்துள்ளார்.
தாய்மதம் திரும்பிய இயக்குனர்: முன்னாள் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் மரணத்தை சிறிதும் தேசப்பற்றின்றி சில முஸ்லிம்கள் கொண்டாடியதை அடுத்து, அலி அக்பர் டிசம்பர் 2021ல் முஸ்லிம் மதத்தை விட்டு வெளியேறி மீண்டும் ஹிந்து மதம் திரும்பினார் ராமசிம்மன் என புது பெயரை சூட்டிக்கொண்டார் என்பது நினைவு கூரத்தக்கது.
மலபார் இனப்படுகொலை: 1921 மலபார் இனப்படுகொலை என்பது ஹிந்துக்களுக்கு எதிரான ஜிஹாத்தின் திட்டமிட்ட பிரச்சாரமாகும். வரியன்குன்னத் குன்ஹாமத் ஹாஜி, அலி முசலியார் போன்றவர்களால் நடத்தப்பட்ட இனப்படுகொலை, கேரளாவில் பத்தாயிராத்துக்கும் அதிகமான ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர். இந்த மாபெரும் படுகொலையை அடுத்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஹிந்துக்கள் கேரளாவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த கொடூர ஹிந்து இனப்படுகொலையில் அழிக்கப்பட்ட, கொள்ளையடிக்கப்பட்ட ஹிந்துக் கோயில்களின் எண்ணிக்கை நூறுக்கும் மேல் என்று ஊகிக்கப்படுகிறது. பல்லாயிரம் ஹிந்துக்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டனர். ஹிந்துக்கள் சொல்ல முடியாத கொடுமைகளை அனுபவித்தனர். அன்னி பெசன்ட் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் போன்றவர்களால் வெளியிடப்பட்ட புத்தகங்களில் மாப்லா படுகொலைகள் விவரிக்கப்பட்டுள்ளன. அன்னி பெசன்ட் தனது ‘தி ஃபியூச்சர் ஆஃப் இந்தியன் பாலிடிக்ஸ்’ என்ற புத்தகத்தில், “அவர்கள் (முஸ்லிம்கள்) ஏராளமாக கொலை செய்து கொள்ளையடித்தார்கள். தங்கள் மதத்துக்கு துரோகம் செய்யாத அனைத்து ஹிந்துக்களையும் கொன்றனர் அல்லது விரட்டியடித்தனர். சுமார் ஒரு லட்சம் பேர், அவர்கள் அணிந்திருந்த ஆடைகளைத் தவிர, எல்லாவற்றையும் களைந்துவிட்டு வேறு எதுவும் இல்லாமல் தங்கள் வீடுகளை விட்டு எங்கெங்கோ விரட்டப்பட்டனர். இஸ்லாமிய ஆட்சி என்றால் என்ன என்பதை மலபார் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது, மேலும் பாரதத்தில் கிலாபத் அரசின் மற்றொரு மாதிரியைப் பார்க்க நாங்கள் விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.