40 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

0
103

கோவை கார் குண்டுவெடிப்பு மற்றும் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு ஆகிய இரண்டு பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ) அதிகாரிகள் நேற்று தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சென்னை, நெல்லை, தென்காசி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், பல்வேறு மின்னணு சாதனங்கள், 4 லட்ச ரூபாய் ரொக்க பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here