பாலிவுட் நடிகையும், நடிகர் சைஃப் அலிகானின் முதல் மனைவியும் நடிகையுமான அம்ரிதா சிங்கின் மகளும், பாலிவுட் நடிகையுமான சாரா அலி கான் பட்டோடி, மகா சிவராத்திரியை முன்னிட்டு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ‘ஜெய் போலேநாத்’ என்ற வார்த்தைகளுடன் படங்களை பதிவேற்றினார். அவரது பதிவில், சாரா ஒரு சிவன் சிலைக்கு முன்னால் அமர்ந்துள்ளார். இதனால் கோபமடைந்த அவரது சமூக உடகத்தை பின் தொடரும் முஸ்லிம்கள், காஃபிர்கள் (முஸ்லிம் அல்லாதோர் தொடர்புடைய நடைமுறைகளில் ஈடுபட்டதற்காக அவரை சமூக ஊடகங்களில் கடுமையாக தாக்கத் தொடங்கினர். இஸ்லாத்தின் போதனைகளுக்கு எதிராகச் சென்று ‘ஷிர்க்’ (உருவ வழிபாடு அல்லது பல தெய்வ வழிபாடு) செய்ததற்காக வெறுக்கத்தக்க, தவறான, மிரட்டும் கருத்துக்களை பதிவிட்டனர். மேலும், மகா சிவராத்திரியைக் கொண்டாடும் குற்றத்தை செய்தார் என கூறி, அவரது கணக்கை இனி பின்தொடர மாட்டோம் என்று பல முஸ்லிம்கள் சபதம் செய்தனர்.