1. சென்னம்மா ’ என்றால் அழகிய பெண் என்று அர்த்தம். சிறு வயதிலேயே குதிரையேற்றம், வாள் வீச்சு, வில்வித்தை போன்றவற்றில் சிறந்து விளங்கினார். சமஸ்கிருதம், கன்னடம், மராட்டி, உருது மொழிகளைக் கற்றார்.
2. 1816-ல் கணவரும் 1824-ல் ஒரே மகனும் இறந்தனர். குழந்தை இறந்தவுடன், சிவலிங்கப்பா என்ற உறவுக்கார குழந்தையைத் தத்தெடுத்து அவனுக்கு முடிசூட்டினார்.
3. கிட்டூர் ராஜ்ஜியத்தைக் கைப்பற்றும் எண்ணத்தில் இருந்த பிரிட்டிஷ் அரசு, வாரிசு இல்லாத ராஜ்ஜியம் என்று கூறி தத்துப்பிள்ளை சிவலிங்கப்பாவை நாடு கடத்த உத்தரவிட்டது. இந்த உத்தரவை ராணி மதிக்கவில்லை.
4. ஆங்கிலேயர்கள் பெரும் படையுடன் பெரிய போர் மூண்டது. மிகவும் துணிச்சலுடனும் தீரத்துடனும் ராணி சென்னம்மா போரிட்டார். ஆங்கிலேயப் படையில் அதிக உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
5. தளபதி சாப்ளின், ராணியுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டு தன் அதிகாரிகளை மீட்டுச் சென்றான். ஆனால், நயவஞ்சகத்துடன் மேலும் அதிகமான படையுடன் வந்து கிட்டூரை மீண்டும் தாக்கினான். இந்த போர் 12 நாட்கள் நீடித்தது.
6. தொடர்ந்து போராடிய சென்னம்மா சிறைபிடிக்கப்பட்டார். பைல்ஹோங்கல் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார்.
7. ராணியிடம் மிகுந்த விசுவாசம் கொண்ட தளபதி சங்கொலி ராயண்ணா, அவரை விடுவிக்க தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆங்கிலேயருக்கு எதிராக கொரில்லா முறையில் தொடர் தாக்குதல்கள் நடத்தினார். ஆனால், அவரால் வெற்றிபெற முடியவில்லை. அவர் கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.
8. 51-வது வயதில் சிறையிலேயே பிப்ரவரி 21, 1829ஆம் ஆண்டு காலமானார்.
9. விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்ட முன்னணி வீராங்கனையாகவும், இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் வீரச் சின்னமாகவும் இன்றளவும் சென்னம்மா கொண்டாடப்படுகிறார்.