உள்நாட்டு உற்பத்தித் திட்டங்களால் பாதுகாப்புத் துறை உற்பத்திப் பொருட்களின் இறக்குமதி குறைந்துள்ளது

0
100

நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை உற்பத்தியை அதிகரிக்க முக்கியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பீரங்கிங்களுக்கான 155 மில்லிமீட்டர் துப்பாக்கி, இலகுரக போர்விமானமான தேஜஸ், தரையிலிருந்து விண்ணுக்குப் பாயும் ஆகாஷ் ஏவுகணை, சீட்டா ஹெலிகாப்டர், ஐஎன்எஸ் கல்வாரி, ஐஎன்எஸ் சென்னை உள்ளிட்ட பல பாதுகாப்புத் துறைத் தளவாடங்கள் இதில் அடங்கும்.

கடந்த சில ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை உற்பத்தியை அதிகரிக்க வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தியில் சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை மாற்றங்களை அரசு கொண்டு வந்ததன் காரணமாக உற்பத்தி அதிகரித்துள்ளது. பாதுகாப்புத் துறை நவீனமயமாக்கவும் உள்நாட்டுக் கொள்முதலை அதிகரிக்கவும் பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உத்ரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்புத் தொழில் வழித்தடங்களை அமைப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அரசின் இந்த நடவடிக்கைகள் நீண்ட கால அடிப்படையில் வெளிநாட்டு சார்பையும், இறக்குமதியையும் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்பு கொள்முதல் 2018-2019 ம் ஆண்டில் 46%ஆக இருந்த நிலையில் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இறக்குமதி 36.7% ஆக குறைந்துள்ளது.

இந்த தகவலை மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் திரு. அஜய் பட் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here