மத்தியப் பிரதேசத்திலிருக்கும் ராம்கார்க் ராஜ்ஜியத்தின் ராஜாவான விக்ரமாதித்யசிங்கின் மனைவி ராணி அவந்திபாய் லோதி.
வாரிசு இல்லாமல் ராஜா உடல் நலிவுற்று இறந்தார். ராஜாவின் இறப்புக்குப் பின் ராணி பதவியில் அமர்ந்து அரசாட்சி செய்வதைத் தடுத்தது பிரிட்டிஷ் அரசு.
நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த ஆங்கிலேய அரசு ஆண் வாரிசுகள் மட்டுமே ஆளவேண்டும் என்று சட்டம் போட்டது. பெண் அரசாள்வதைத் தடுப்பதா..? எனக் கொந்தளித்த ராணி தனது நாட்டை மீட்க உறுதி
பூண்டார்.
1857 ல் நான்காயிரம் வீரர்களைத் திரட்டி ஆங்கிலேயர் அதிகாரத்துக்கு எதிராகப் போர் தொடுத்தார்.
மிகத்தீரத்துடன் போர் புரிந்தும் கூட நவீனக் கருவிகளுடன் போரிட்ட ஆங்கிலேயப் படைக்கு முன்னால் ராணியின் படைகள் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
தோல்வியைத் தழுவ விருப்பமில்லாமல் வீரம் மிக்க ராணி அவந்திபாய் 1858, மார்ச்20 ஆம் தேதி தனது வாளினால் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார்.
இவருக்கு வீர வணக்கம் தெரிவிக்கும் விதமாக அரசு, ஜபல்பூர் அணைக்கு இவர் பேரைச் சூட்டி உள்ளது.
மகாராஷ்டிரா அரசாங்கமும், தபால் துறையும் இவரது வீரத்துக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக அஞ்சல்தலையை வெளியிட்டுள்ளன.