அடிக்கு பதிலடி கொடுத்த பாரதம்: வழிக்கு வந்தது இங்கிலாந்து

0
226

லண்டனில் உள்ள பாரத தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் முற்றுகை யிட்டு தேசியக் கொடியை அவமரியாதை செய்தனர். தூதரகத்தில் பணியாற்றிய வர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

லண்டன் காவல் துறை போதிய அளவு பாதுகாப்பு அளிக்கவில்லை. வன்செயல் களில் ஈடுபட்டவர்கள் மீதும் முறையான நடவடிக்கை இல்லை.

இந்நிலையில் தில்லியில் உள்ள இங்கிலாந்து நாட்டின் தூதரகத்திற்கு அளித்து வந்த பாதுகாப்பு திரும்பப் பெறப் பட்டது. அலுவலகத்தை சுற்றி போடப்பட்டு இருந்த தடுப்புகளும் அகற்றப்பட்டது.

பாரத அரசின் மேற்கண்ட நடவடிக்கையை அறிந்த இங்கிலாந்து அரசு விரைந்து வழிக்கு வந்தது.

உடனடியாக லண்டனில் உள்ள பாரத் பவன் தூதரகத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளது.

16 போலீஸ் வாகனங்கள், 100 க்கும் அதிகமான காவல்துறையினரை தூதரகப் பாதுகாப்பிற்கு அனுப்பி வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here