கோயிலை மசூதியாக மாற்ற முயற்சி?

0
229

கேரளாவில் சமீபத்தில், வெள்ளையணி பத்ரகாளி கோயிலின் அலங்காரத்தில் காவி நிறத்தைப் பயன்படுத்த கேரள அரசு தடை விதித்த சூழலில், கேரளாவின் மற்றொரு மாவட்டத்திலும் இதேபோன்றதொரு சர்ச்சைக்குரிய நிகழ்வு ஏற்பட்டுள்ளது. சமீபத்திய இந்த சம்பவத்தில், பூரம் திருவிழாவை முன்னிட்டு, மலப்புரத்தில் உள்ள அங்காடிபுரத்தில் உள்ள திருமாந்தம்குன்னு கோயிலின் ஹிந்து அல்லாதோர் தலைமையிலான விழாக் குழுவினர், பூரம் திருவிழாவை முன்னிட்டு, கோயிலுக்கு பாகிஸ்தான் கொடியின் வண்ணமான பச்சை மற்றும் வெள்ளை நிற வர்ணம் பூசியுள்ளனர். அந்த வண்ணம் கோயிலை மசூதி போல் காட்டியதையடுத்து அங்கு சர்ச்சை வெடித்தது. சமூக ஊடகங்கள் மக்கள்பார்வைக்கு இதனை எடுத்துச் சென்றன. இந்த சர்ச்சைக்குப் பிறகு, ஹிந்து ஐக்கிய வேதி (HAV) மற்றும் பிற ஹிந்து மற்றும் கோயில் அமைப்புகள், வண்ணத்தை மாற்றக் கோரி கோயில் கமிட்டியை வலியுறுத்தின. கோயில் கமிட்டியினர், பின்னர் வர்ணத்தின் நிறத்தை மாற்ற ஒப்புக்கொண்டனர். இக்கோயில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பதும், விழாக் குழுவில் உள்ள 14 உறுப்பினர்களில் ஐந்து பேர் முஸ்லிம்கள். குழுவில் முதல் பெயராக முஸ்லிம் லீக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல் சமத் சமதானியின் பெயர் உள்ளது. குழுவின் தலைவர் மஞ்சளாம்குழி அலி, எம். எல்.ஏ. குழுவின் துணைத் தலைவர்களில் ஒருவர் ஜோஸ் வர்கீஸ் என்ற கிறிஸ்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here