இந்திய விமானப் படையின் பாலகோட் ஆபரேஷன்ஸ் புகழ் ”மிராஜ் 2000′ போர் விமானம், இங்கிலாந்தின் வாடிங்டன் விமானத் தளத்தில் நடைபெற்ற பன்னாட்டு கூட்டுப்போர் பயிற்சியான.கோப்ராவாரியர் 2023ல் முதன்முறையாக பங்கேற்றது. ‘கோப்ரா வாரியரில்’ பயன்படுத்தப்பட்ட மிராஜ் 2000 விமானம் பாலகோட் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டதா என்று கேட்கப்பட்டதற்கு, குழுத் தலைவர் குரூப் கேப்டன் எம் கங்கோலா, “இவை ஒரே மாதிரியான இயந்திரங்கள் தான். அவை நவீன போருக்கு ஏற்ப மிகவும் திறமையான விமானங்களாக இருக்கின்றன” என்றார். பன்னாட்டுப் பங்கேற்பு குறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட கங்கோலா மேலும் கூறுகையில், “இந்த அனுபவம் மிகவும் செழுமையாக இருந்தது. பாரதத்தில் இருந்து 4,500 மைல்கள் பயணித்து, உலகம் முழுவதும் உள்ள பல்வேறு விமானப் படைகளுடன் மிகவும் கடுமையான வானிலையில் செயல்பட முடிந்தது. மேலும் நாங்கள் மிகக் குறுகிய காலக்கட்டத்தில் மிகவும் சிக்கலான பணிகளைச் செய்ய முடிந்தது. இது ஒரு சிறந்த அனுபவம். பங்கேற்கும் நாடுகளுடன் பறக்கும்போது நாங்களும் சிலவற்றை கற்றுக்கொண்டோம்” என்றார். இந்த பயிற்சிக்காக, இந்திய விமானப்படை, 5 மிராஜ் 2000 ஜெட் விமானங்கள், இரண்டு சி 17 குளோப் மாஅஸ்டர் 3, மூலோபாய ஏர்லிஃப்ட் விமானங்கள் மற்றும் ஒரு ஐஎல் 78 நடுவானில் எரிபொருள் நிரப்பும் விமானம், சுமார் 100 விமானப்படை வீரர்களுடன் ஜாம்நகர் விமான தளத்தில் இருந்து வாடிங்டனுக்கு அனுப்பியது