காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் சமீபத்திய அத்துமீறலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள பாரதத் துணை தூதரகத்திற்கு வெளியே ஏராளமான பாரத அமெரிக்க சமூகத்தினர் திரண்டு மூவர்ணக் கொடியை அசைத்து தங்கள் தாய்நாட்டிற்கான ஒற்றுமையை வெளிப்படுத்தினர். அவர்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், ஆதரவாளர்கள் அமெரிக்கக் கொடி மற்றும் பாரத மூவர்ணக்கொடி இரண்டையும் ஏந்தியிருந்தனர். இந்த கூட்டத்தில் அமெரிக்காவில் வசிக்கும் பாரத மக்கள், பாரத வம்சாவளியினர் கலந்துகொண்டு, உரத்த குரலில் ‘வந்தே மாதரம்’ மற்றும் ‘பாரத் மாதா கி ஜெய்’ என முழக்கமிட்டனர். காலிஸ்தானி பிரிவினைவாதிக்ளால் அங்கு அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க, உள்ளூர் காவலர்கள் அதிக அளவில் அங்கு குவிக்கப்பட்டனர். எனினும், சில பிரிவினைவாதிகளங்குசிலர் காலிஸ்தான் சார்பு கோஷங்களை எழுப்பினர். ஆனால் “வந்தே மாதரம்” என்று முழக்கமிட்டு மூவர்ணக் கொடியை அசைத்த பாரத அமெரிக்கர்களின் எண்ணிக்கை அவர்களை விட பல மடங்கு அதிகமாக இருந்தது. காலிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பிய பிரிவினைவாதிகள், நகர காவல்துறையால் அமைக்கப்பட்ட தற்காலிக பாதுகாப்பு தடைகளை உடைத்தனர். எனினும், அவர்களை காவலர்கள் கட்டுப்படுத்தினர். இந்த வாரம் சில காலிஸ்தானி பயங்கரவாதிகள், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பாரத துணை தூதரகத்திற்குள் நுழைந்து, தூதரக வளாகத்திற்குள் இரண்டு காலிஸ்தானி கொடிகளை நிறுவினர். போராட்டக்காரர்கள் நகர காவல்துறையால் எழுப்பப்பட்ட தற்காலிக பாதுகாப்பு தடைகளை உடைத்தனர். பஞ்சாபில் மீண்டும் ‘காலிஸ்தானி தருணத்தை’ பற்றவைத்த ‘பிந்த்ரன்வாலே பதிப்பு 0.2’ என அழைக்கப்படும் அம்ரித்பால் சிங்கைப் பிடிக்க பஞ்சாப் காவல்துறை வேட்டையாடலைத் தொடங்கிய பின்னர் இந்த சம்பவம் நடைபெற்றது. கடந்த சில வாரங்களாக அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் பாரதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இந்த நாடுகளில் உள்ள சில ஹிந்துக் கோயில்களை நாசப்படுத்தப்பட்ட நிகழ்வுகளும் காணப்படுகின்றன.