பேராசிரியர் கே ஆர் பரமசிவன் நினைவு மருத்துவ முகாம்:
25 வது ஆண்டு தொடக்க விழா
மதுரையில் மதுரா கல்லூரியில் வணிகவியல் துறைப் பேராசிரிய ராகப் பணியாற்றியவர்.
நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி கல்லூரியில் தனது கல்லூரி ஆசிரியர்ப் பணியைத் தொடங்கிய அவர் பின்னர் அங்கிருந்து மதுரையில் உள்ள மதுரா கல்லூரியில் பேராசிரியராக வந்து சேர்ந்தார்.
மாணவர்கள் முன்னேற்றத்திற்காக தனது வருமானத்தில் பெரும் தொகையை வழங்கியவர். நல்ல விளையாட்டு வீரர். பிராணாயாமம் & யோகா செய்வது அன்றாட வாடிக்கை. ஆன்மீகம், பக்தி மிக்கவர். தினசரி ஆலயம் செல்வதும் வழக்கமாகக் கொண்டிருந்தவர்.
தன் வீட்டின் அருகில் இருந்த குடிசை வாசிகளுக்கு இவரது வீட்டுக் கதவுகள் எப்போதும் திறந்து இருக்கும். அப்பகுதி மக்களுடன் ஹனுமத் ஜெயந்தி விழாவை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடுவார்.
இவர்மட்டுமல்ல இவரது குடும்பத்தினர் அனைவரும் தீவிர தேசிய ஆன்மீக சிந்தனை கொண்டவர்கள். எவரிடத்திலும் கடுகளவு கூட ஜாதி உணர்வு காண முடியாது.
பேராசிரியர் கே ஆர் பரமசிவன் உட்பட இவரது சகோதரர்கள் 4 பேர் சமுதாயத்திற்காக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர்கள்.
கே ஆர் பரமசிவன் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தின் மாநிலத் துணைத் தலைவர் & மாநிலத் தலைவராக பொறுப்பேற்று இயக்க வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிந்தவர். எப்போதும் சிரித்த முகம். கோபம் என்பதைப் பார்க்கவே முடியாது. யாராவது கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்று அறிந்தாலே போதும் அவர்களை தேடிச் சென்று உதவி செய்வதை இயல்பாகக் கொண்டிருந்தார்.
1998 ஆம் வருடம் மார்ச் 28 அன்று ஶ்ரீ ராகவேந்திரர் கோயிலுக்குச் சென்று விட்டு இரவு 9 – 9.15 மணி அளவில் மதுரை ஷெனாய் நகரில் உள்ள வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது அவரது வீட்டிற்கு மிக அருகில் சில மீட்டர் தூரத்தில் சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கொலை செய்தவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கத்தைச் சேர்ந்த வர்கள். அன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப் பில் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமை யில் அமைந்த அரசு வெற்றி பெற்றதை சகித்துக் கொள்ள இயலாத மதவெறி பிடித்த ஜிஹாதி யினர் இப்படுகொலையை செய்தனர்.
யாருக்கும் எவ்வித தீங்கும் செய்யாத பேராசிரியர் கே ஆர் பரமசிவன் கொலை செய்யப்பட்டு மார்ச் 28 அன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது.
சேவை செய்வதையே லட்சியமாகக் கொண்டிருந்த கே ஆர் பரமசிவன் நினைவாக ஏ.பி.வி.பி.யும் & இளைய பாரதம் சேவா டிரஸ்ட் (EBST) இணைந்து வாராந்திர இலவச மருத்துவ முகாமினை அவரது முதலாமாண்டு நினைவு தினத்தன்று (1999 மார்ச்) தொடங்கியது.
கடந்த 24 ஆண்டுகளாக வாரம்தோறும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. ஆண்டுக்கு ஓரிரு தடவை சிறப்பு மருத்துவ முகாம்களும் எற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்கள் பெரும் பயனடைந்துள்ளனர்.
பிரபல மருத்துவர்கள் பலர் தொடர்ந்து பங்கேற்று மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். முன்னாள் இந்நாள் ஏ.பி.வி.பி. கார்ய கர்த்தர்கள் பலர் மருத்துவ முகாம் தொடர்ந்து நடைபெற வேலை செய்தும், நிதி உதவியளித்தும், மருந்துகள் வாங்கிக் கொடுத்தும் உதவி புரிந்து வருகின்றனர்.
ஜிஹாதியினர் பேராசிரியர் கே ஆர் பரமசிவனின் உயிரைப் பறித்திருக்க லாம் ஆனால் அவரது லட்சியம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
25 வருட சிறப்பு மருத்துவ முகாம் இன்று காலை 10 மணிக்கு மதுரையில் நடைபெறுகிறது. இதில் பாரதீய மஸ்தூர் சங்கத்தின் (BMS) அகில பாரத அமைப்புச் செயலாளர் பி.சுரேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் & பேராசிரியர் எஸ்.ஆதிநாராயணன்,
ஏ.பி.வி.பி. தேசியத் துணைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் அல்லம் பிரபு ஆகியோர் பங்கேற்க உள்ளனர்