1. குரு தேக் பகதூர் சீக்கிய குருக்களில் ஒன்பதாம் குரு. ஏப்ரல் 1,1621 ஆம் ஆண்டு பிறந்தார்.
2. புனித குரு கிரந்த் சாகிப்பில் இவரது 115 இறைப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
3. பல்கலை வித்தகர், வில்வித்தை, கத்திச் சண்டையில் நிபுணர், குதிரையேற்றத்தில் வல்லவர், இதிகாஸ நூல்களில் புலமை பெற்றவர்.
4. பதினான்காம் வயதிலேயே முகலாயரை போரில் எதிர்கொண்ட
அஞ்சா நெஞ்சர். பகலா என்னும் இடத்தில் 26 வருடங்கள் 9 மாதங்கள் 13 நாட்கள் இவர் தவத்தில் இருந்தார்.
5. காஷ்மீரி ஹிந்து பண்டிட்களை கட்டாயமாக இஸ்லாமிற்கு மாற்றும் அநியாயத்தைத் தட்டிக் கேட்டார்.
6. ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் இஸ்லாமிற்கு மாற்றும் முகலாய அரசின் போக்கை எதிர்த்து தைரியமாகப் போர்க்கொடி உயர்த்தினார்.
7. நயவஞ்சக ஔரங்கசீப் இவரைப் பிடித்து வந்து இஸ்லாமிற்கு மாறு, இல்லையேல் உயிரை எடுப்பேன் என்று கூறிய போது ஒருக்காலும் இஸ்லாமிய மதத்தை ஏற்க மாட்டேன். சாவதே மேல் என்று முழங்கினார்.
8. அனைவருக்கும் முன்பாக 1675-ல் இவர் தலை துண்டிக்கப்பட்டது. இவர் இறந்த இடம் குருத்வாரா சிஸ் கஞ்ச் சாஹிப். இவர் உடல் எரிக்கப்பட்ட இடம் குருத்வாரா ராகெப் கஞ்ச் சாஹிப்.