பீகார் ஷரீப்பில் ராம நவமி வன்முறையில்  ஈடுபட்ட குற்றவாளிகள்  கைது

0
257

பீகார்  மாநிலத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையைத் தாக்குதலில் 77 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

மேலும் வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம் என்றும் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பீகார்ஷரீப்பில் நடந்த வன்முறை குறித்து நாளந்தா காவல்துறை தெரிவித்துள்ளது .

“நேற்று இரவு புதிய வன்முறையில் இறந்த ஒருவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நேற்று இரவு நடத்தப்பட்ட சோதனையில் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு பீகார்ஷரீப்பில் 2-3 இடங்களில் புதிய வன்முறை வெடித்தது. தற்போது நிலைமை அமைதியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here