‛அக்னி’ வீரர்களுக்கு ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யாவில் பயிற்சி

0
212

‛அக்னிபாத்’ திட்டத்தில், கடற்படைக்கு தேர்வு செய்யப்பட்டு, அடிப்படை பயிற்சியை முடித்துள்ள வீரர்கள், ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யா கப்பலில், அடுத்தகட்ட பயற்சியில் ஈடுபட உள்ளனர். முப்படைகளிலும் வீரர்கள் சேர்க்கப்பட்டு பயிற்சி பெற்று வந்த நிலையில், கடற்படையில் சேர்க்கப்பட்ட, முதல் பேட்சை சேர்ந்த, 272 பெண்கள் உட்பட 2,585 அக்னிவீரர்கள், ஒடிசாவின், ஐ.என்.எஸ்., சில்கா பயற்சி மையத்தில், பயிற்சி பெற்று வந்தனர். அடிப்படை பயற்சிகளை முடித்த இவர்கள், நாட்டின் விமானம் தாங்கி போர்க்கப்பலான, ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யா போர்க்கப்பலில் அடுத்தகட்ட பயற்சிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், வீரர்களுக்கு கடலில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பணிபுரிவதற்கான, பயிற்சிகள் வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here