ஜெய்ப்பூர். இந்து துறவிகள் தியானம் மற்றும் பிரசங்கம் ஆகியவற்றில் மூழ்கியிருக்கும் போது மிஷினரிகள் சேவை செய்து வருகிறார்கள் என்ற மாய பிம்பம் நாட்டில் உருவாக்கப்பட்டு விட்டது. பல தசாத்தங்களாக உருவாக்கப்பட்டு விட்ட இந்த குழப்பத்தை நீக்குவதற்கான வேலையை ராஷ்ட்ரீய சேவா சங்கம் மூலம் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் தொடங்கியுள்ளது.
ஜெய்ப்பூரில் ராஷ்ட்ரீய சேவா பாரதி ஏற்பாடு செய்திருந்த இந்த சேவா சங்கமத்தின் தொடக்க விழாவில் ஆர்எஸ்எஸ்-ன் அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் பகவத், சமுதாயத்தை வெளிப்படச் செய்து நாட்டில் பணி புரியும் மிஷனரிகளை விட அதிகமாக துறவிகள் பணிகள் செய்கிறார்கள் என்று கூறினார். சேவைத் துறையில் அறிவொளி பெற்றவர்கள் மிஷனரிகள் என்று பெயர் எடுக்கிறார்கள். மிஷனரிகள் உலகம் முழுவதும் பல பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் நடத்துகிறார்கள் ஆனால் தென்னாட்டில் நான்கு மாகாணங்களில் ஆன்மீக துறையில் நமது ஆச்சாரியார்ய முனிகளும் துறவிகளும் ஆற்றிய சேவை மிஷனரிகளை விட பல மடங்கு அதிகம் என்று தெளிவுபட கூறினார்.
இதை அவர்களுக்கு போட்டியாக கூறுகிறார் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது சில மிஷனரிகள் வெளிநாட்டு சதியால் தவறான சேவை உதவியுடன் பெரிய அளவில் மதமாற்றத்தில் ஈடுபடுவதாக குற்றம் தட்டப்படுகிறது அதனால் அவரது இந்த வார்த்தை மிக முக்கியமானது. ஆண்டுகளாக நடக்கும் இந்த சதியால் நாட்டின் மக்கள் தொகை நிலையே மாறிவிட்டது இந்த சதியால் நாட்டில் பல பகுதிகளில் இந்துக்களின் தொகை மிகவும் குறைந்து காணப்படுகிறது. இவர்களுக்கு நாட்டின் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பழங்குடி சமூகம் சேவையின் இலக்காக உள்ளது. அதனால் தான் நமது நாட்டை உலகின் குருவாக ஆக்க வேண்டுமானால் நாட்டின் பிற்படுத்தப்பட்ட நலிவடைந்த பிரிவினர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று சேவா சங்கத்தில் மோகன் பகவத் தெரிவித்தார்.