பஞ்சாபின் பட்டிண்டா ராணுவ தளத்தில் நடந்த தாக்குதல், பயங்கரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பு இல்லை என பஞ்சாப் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பஞ்சாபின் பதிண்டா ராணுவ தளத்தில் இன்று ஏப்.12 அதிகாலை 4:35 மணியளவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது இந்நிலையில், பஞ்சாப் போலீஸ் வட்டாரங்கள் ராணுவ தளத்தில் நடந்தது, பயங்கரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பு இல்லை. ராணுவ தளத்திற்கு செல்லும் அனைத்து வாயில்களும் அடைக்கப்பட்டு உள்ளன. 2 நாட்களுக்கு முன்னர், 28 தோட்டாக்களுடன் ரைபிள் ஒன்று காணாமல் போனது. இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில், ராணுவ வீரர்கள் இருக்கலாம். என்று கூறப்படுகின்றன.