தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) முகலாய சாம்ராஜ்யம் குறித்த சில அத்தியாயங்களை நீக்கிவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது வெளிப்படையான முகலாய அனுதாபிகளுக்கும் தாராளவாதிகள் என்று அழைக்கப்படுபவர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாடப்புத்தகங்களில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டால், எதிர்கால சந்ததியினர் முகலாயர்களைப் பற்றி அறிய மாட்டார்கள் என்று ஆதாரமற்ற ஊகங்களை அவர்கள் உருவாக்கத் தொடங்கி விட்டனர். என்.சி.இ.ஆர்.டி புத்தகங்களில் முகலாய அத்தியாயங்களை நீக்குவது தொடர்பான விவாதங்கள் தொடங்கியதையடுத்து, “சிவாஜியின் ராணுவம் கொள்ளையடித்து, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது” என்று காங்கிரஸ் ஆதரவு பத்திரிகையான நேஷனல் ஹெரால்டின் ஆசிரியர் சுஜாதா ஆனந்தன் கூறியுள்ளார்.
காங்கிரஸின் ஊதுகுழலான நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் ஆசிரியர் சுஜாதா ஆனந்தன் தனது டுவிட்டர் பதிவில், “தாஜ்மஹால் அருவருப்பானது அல்ல. இது உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும். மேலும் அந்த நினைவுச்சின்னத்தால் பாரதம் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளைப் பெறுகிறது. சத்ரபதி சிவாஜி சிறந்தவர். நிச்சயமாக. ஆனால் அவர் எதிர்த்துப் போரிட்ட மொகலாயர்கள் இல்லையென்றால் அவருடைய வெற்றிகள் ஒன்றும் இல்லாமல் போய்விடும். அவர்களை எதிர்த்தார். அவர்களிடம் பிடிபட்டார். அவர்களின் உயர் பாதுகாப்பு நிலவறைகளில் இருந்து தப்பினர். பல போர்களில் அவர்களை தோற்கடித்தார். சிவாஜியை ஒருபோதும் வெல்ல முடியாத பேரரசர் ஔரங்கசீப்பின் பக்கத்தில் ஒரு நிலையான முள்ளாக இருந்தார். முகலாயர்களை அப்புறப்படுத்துங்கள், சத்ரபதி சிவாஜியின் வாழ்வுரிமையை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார். அதாவது, .முகலாயர்கள் இல்லையென்றால், அவர்களுடன் போரிடவில்லை என்றால் சத்ரபதி சிவாஜி என்பவர் யாருக்கும் தெரியாமலேயே போயிருப்பார்” என அவர் சொல்ல முயல்கிறார்.
மேலும், சுஜாதா ஆனந்தன் தனது மற்றொரு பதிவில், “ஆர்.எஸ்.எஸ் வரலாற்றின் மதவெறி உணர்வு எவ்வளவு திரிக்கப்பட்டது. சிவாஜியின் ராணுவம் கூட கொள்ளையடித்தது, பெண்களை கற்பழித்தது. அதைத்தான் அந்த நாட்களில் வெற்றி பெற்ற ராணுவங்கள் செய்தன. கல்யான் பகுதியின் முஸ்லிம் ஆளுநரின் மருமகளை பாலியல் பலாத்காரம் செய்யாததற்காகவும் தனது வீரர்கள் போரில் பெண்களுடன் ஈடுபடாமல் இழுத்ததற்காகவும் சத்ரபதி சிவாஜி மகாராஜை ஒரு முட்டாள் என்று நீங்கள் பெரிய சின்னமாக கருதும் சாவர்க்கர் முத்திரை குத்தினார். பில்கிஸ் பானோவின் கற்பழிப்பாளர்கள் உங்கள் அமைச்சர்களுடன் மேடைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்” என கூறியுள்ளார்.
இப்படி உலகம் போற்றும் சத்ரபதி சிவாஜி மற்றும் அவரது ராணுவத்திற்கு எதிராக அசிங்கமான வார்த்தைகளை அவர் பயன்படுத்தியுள்ளதற்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் அவரை கண்டித்து வருகின்றனர். சத்ரபதி சிவாஜி, பெண்களை மதித்து மரியாதை செய்த பல சம்பவங்கள் வரலாற்றில் இடம் பிடித்துள்ளன. சத்ரபதி சிவாஜியும், சிமாஜி அப்பாவும் கல்யாணின் முஸ்லிம் ஆளுநரின் மருமகளை மரியாதையுடன் திருப்பி அனுப்பியதும் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான். மேலும்ன் “எதிர்காலத்தில், எதிரி நாட்டில் போர் மற்றும் தாக்குதல்களின் போது, பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தொடக்கூடாது” என்று அவர் கட்டளையிட்டார். பஸ்சைனின் போர்த்துகீசிய ஆளுநரின் மனைவியையும் அவ்வாஅறே பத்திரமாக திருப்பி அனுப்பினார். கஜினி, முகமது கோரி, அலாவுதீன் கில்ஜி போன்ற கொடூர முஸ்லிம் ஆட்சியாளர்களும் அவர்களது படை வீரர்களும் ஆயிரக்கணக்கான ஹிந்துப் பெண்களையும் சிறுமிகளையும் துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சுஜாதா ஆனந்தன், ஹிந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, பி.பி.சி. புளூம்பெர்க், குவிண்ட், ஹிந்து, நியூஸ் 18, லோக்மத், தி வயர், ஸ்க்ரோல் உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றிய ஒரு பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.