சென்னை ஐ.சி.எப்., ஆலையில் தயாரிக்கப்பட்டு வரும், 15வது வந்தே பாரத் ரயில், தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை எந்த வழித்தடத்தில் இயக்குவது என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இதுவரை, சென்னை ஐ.சி.எப்.,பில் தயாரிக்கப்பட்டு, 14 வழித்தடங்களில், வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்து தயாராகும், 15வது வந்தே பாரத் ரயிலை, தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கி, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுஉள்ளது.
‘ஐ.சி.எப்.,யில் மாதந்தோறும் இரண்டு அல்லது மூன்று வந்தே பாரத் ரயில்களை தயாரித்து வழங்குகிறோம்’ என்றனர். தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ’15வது, வந்தே பாரத் ரயிலை, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கலாமா; கேரளா மாநிலம், திருவனந்தபுரம் – கண்ணுாருக்கு இயக்கலாமா என, ஆலோசித்து வருகிறோம். வழித்தடம் விரைவில் அறிவிக்கப்படும்’ என்றனர்.