கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே, கங்கமடுகு கிராமத்தில், இசைக்கலைஞன் நடுகல் கண்டறியப்பட்டது. கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியது: கங்கமடுகு கிராமத்தில், திம்மராஜ் வீட்டின் அருகே ராமே கவுடு – லட்சுமே கவுடு பெயரில், வழிபாட்டிலுள்ள, 13 நடுகற்கள் கண்டறியப்பட்டன. அதில், போரில் இறந்த வீரர்களுக்கும், இரண்டு இசைக் கலைஞர்களுக்கும் எடுக்கப்பட்டுள்ளது. இவை, 17ம் நுாற்றாண்டை சேர்ந்தவை. சிற்பமாக உள்ள இசைக்கலைஞர், அப்பகுதியில் புகழ் பெற்ற கலைஞராக இருந்திருக்கலாம். அவரை சிறப்பிக்கும் வகையில், அவரையும், அவருடைய மனைவியின் நினைவை போற்றும் வகையிலும், நடுகல்லை எடுத்துள்ளனர்.