ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

0
312

சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஜி ஸ்கொயர் நிறுவனம் திருச்சி,கோயம்புத்தூர், பெங்களூர், ஹைதரபாத் உள்ளிட்ட இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. நிலங்களை வாங்கி குடியிருப்புகளாக கட்டி விற்பனை செய்வதுடன், நிலங்களாகவும் ஜி ஸ்கொயர் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவன தலைமை அலுவலகம் உள்பட 50- க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் வீடுகள், அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன், அவரது மகன் கார்த்திக் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணிக்கு மாநில போலீசாரை அழைக்காமல், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை வைத்து சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here