தமிழில் வருமானவரி கையேடு வெளியீடு

0
394

தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டலம், 2022 – 23ம் நிதியாண்டில், 1.08 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. இதில், 52 சதவீதமான, 55 ஆயிரத்து, 823 கோடி ரூபாய், வருமான வரிப் பிடித்தம் பிரிவில், வசூலாகி உள்ளது.வருமான வரி பிடித்தம் செய்வோருக்கான சந்திப்பு கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், வருமான வரி பிடித்தம் தொடர்பான தமிழ் கையேட்டை, வருமான வரி முதன்மை தலைமை கமிஷனர் ரவிச்சந்திரன் வெளியிட்டார். இந்த கையேடு முதன் முறையாக தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.இதில், மின்னணு வாயிலாக வரி பிடித்தம், விண்ணப்பம் தாக்கல் செய்தல் உட்பட, 16 தலைப்புகளில், தகவல்கள் இடம்பெற்றுள்ளன.இது தொடர்பான வீடியோக்களும் வெளியிடப்பட்டு, https://tnincometax.gov.in என்ற வருமான வரி இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இது, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை சேர்ந்த வரி செலுத்துவோருக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here