சாது மகருக்கு தலை துண்டிப்பு மிரட்டல்

0
136

சாது மகருக்கு தலை துண்டிப்பு மிரட்டல்

புனேவில் உள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரான சாது மகர், சமீபத்தில் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தைப் பார்க்கச் செல்பவர்களுக்கு கட்டணமில்லா இலவச ஆட்டோ சவாரி சேவையை வழங்கினார். தனது ஆட்டோவில் இதுகுறித்த பேனருடன் சாது மகரின் படம் சமூக ஊடகங்களில் வைரலானது. அதன்பிறகு, அவரது இந்த நடவடிக்கைக்கு அவரை வாழ்த்தி தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்தன. இந்த அழைப்புகள் அவரது நம்பிக்கையை அதிகரித்தது. ஆனால், அதேசமயம், அவருக்கு கேரளா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு முஸ்லிம்களிடம் இருந்து மிரட்டல் அழைப்புகள் வர ஆரம்பித்தன. பலர் முஸ்லிம்கள் அவரை கீழ்தரமாக பேசி துஷ்பிரயோகம் செய்தனர். ராஜஸ்தானில் முஸ்லிம் அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவி தையல் கடைக்காரரான கன்னையா லாலை உதாரணம் கட்டி பேசிய முஸ்லிம்கள் உனக்கும் அந்த கதி தான் நேரும் என மிரட்டல் விடுத்தனர். இதனால் அவர் அந்த அலைபேசி அழைப்புகளை ‘பிளாக்’ செய்தார். அவருக்கு வாஸ்அப் மூலமாகவும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. தொடர்ந்து இத்தகைய கொலை மிரட்டல் அழைப்புகள் வரவே அவர், ஆலண்டி காவல் நிலையத்திற்குச் சென்று இது குறித்து புகார் அளித்தார். அவர் புகார் அளித்துக்கொண்டு இருக்கும்போதே அவருக்கு சில கொலை மிரட்டல்கள் வந்தன, அதனை அங்கிருந்த காவல் அதிகாரிகளும் கேட்டு அவருக்கு மிரட்டல்கள் வருவதை உறுதி செய்துகொண்டனர்.

 

சாது மகர் இதுகுறித்து கூறுகையில், “இதுவரை நான் தனியாக தர்ம காரியங்கள் செய்து வந்தேன், ஆனால் நான் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றபோது, ஹிந்து அமைப்பைச் சேர்ந்த சில உள்ளூர் இளைஞர்கள் தானாக முன்வந்து என்னுடன் வந்தனர். இது மிகவும் உறுதியான விஷயம். நான் தனியாக இல்லை, எனக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று உணர்ந்தேன். சமூகப் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்ட நல்ல படங்களை மக்கள் பார்க்க வேண்டும் என்பதால் இதனை செய்தேன். சில ஊடகங்கள் எனது செய்திகளை நேர்மறையான உணர்வில் வெளியிட்டன. அது என்னை நல்லது செய்யத் தூண்டுகிறது” என்றார். மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள அக்கல்கோட் நகரைச் சேர்ந்தவர் சாது மகார். இவர் முன்பு புனேயில் உள்ள ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அவர் ஒரு ஆட்டோவை வாங்கி புதிய தொழிலைத் தொடங்கினா, இவர் புனேவில் உள்ள ஆலந்தி மற்றும் மார்கல் பகுதிகளில் தனது ஆட்டோவை இயக்கி வருகிறார். அங்குள்ள ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சாது மகர் இலவச சேவைகளை வழங்கி வருகிறார். மாணவர்களை இலவசமாக பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார். பணம் இல்லாத ஏழைகளை பார்க்கும் போதெல்லாம், கட்டணம் ஏதும் வாங்காமல் அவர்களை அவர்கள் சேருமிடத்திற்கு அழைத்துச் செல்கிறார். இப்படி தன்னால் முடிந்த சேவைகளை அவர் தொடர்ந்து செய்து வருவதால் அவருக்கு அங்கு மிக நல்ல பெயர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here