#சுவாமி_ஸ்ரீயுக்தேஸ்வர்கிரி
1. மேற்குவங்க மாநிலம் செராம்பூரில் 1855-ல் மே 10-ம் நாள் பிறந்தார். இவரது இயற்பெயர் பிரியநாத் கரார், சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால், ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார்.
2. பள்ளி, கல்லூரியில் அறிவுக்கூர்மை மிக்க மாணவராகத் திகழ்ந்தார். ஆங்கிலம், பிரெஞ்ச், இந்தி, பெங்காலி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.
3. கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் 2 ஆண்டுகள் பயின்றவர். பட்டங்கள் வாங்குவதற்காக அல்லாமல், அந்த பாடங்களைத் தெரிந்துகொள்ளவே கல்லூரிக்கு சென்றார்.
4. குருவின் குருவான, மகாவதார பாபா எனும் பாபாஜியின் கட்டளையை ஏற்று ‘கைவல்ய தரிசனம்’ என்ற நூலை எழுதி முடித்தார். இந்நூல் ஆங்கிலம், பிரெஞ்ச், இத்தாலி, ஜப்பான் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அச்செயலுக்காக பாபாஜியே இவருக்கு ‘சுவாமி’ என்ற பட்டத்தை அளித்தார்.
5. தமது சொந்த ஊரான செராம்பூரில் இருந்த 2 அடுக்கு கட்டிட வீட்டை ஆசிரமமாக மாற்றி, அதற்கு ‘பிரியதாம்’ எனப் பெயரிட்டார். அங்கு மாணவர்கள் மற்றும், சீடர்களுடன் வசித்தார்.
6. 1903-ல் ஒடிசா மாநிலம் புரியில் மற்றொரு ஆசிரமம் அமைத்து,
கல்வியைப் பரப்ப இந்த 2 ஆசிரமங்களிலும் மாணவர்களுக்குப் பாடம் கற்பித்தார்.
7. ‘சாது சபா’ என்ற அமைப்பை உருவாக்கிய யுக்தேஷ்வர் கிரி, இயற்பியல், உடலியங்கியல், புவியியல், வானியல், மற்றும் சோதிடக் கலை ஆகிய பாடங்களுக்கு பாடத்திட்டங்கள் வகுத்தார்.
8. சுய கட்டுப்பாடு, மனதை ஒருமுகப்படுத்துவது, ஆழமான ஆன்மிக உள்ளுணர்வு, அர்ப்பணிப்பு உணர்வு, கடுமையான ஒழுக்கம் ஆகியவற்றை மாணவர்களுக்கு போதித்தவர்.