கேரள வி.எஸ்.கே நாரத ஜெயந்தி விருதுகள்

0
77

கருத்து சுதந்திரத்தை அரசுகளால் மட்டும் பாதுகாக்க முடியாது என மூத்த பத்திரிகையாளரும், இடதுசாரி ஜனநாயக முன்னணியின் (எல்.டி.எப்) முன்னாள் எம்.பியும், எம்எல்ஏவுமான டாக்டர் செபாஸ்டியன் பால் தெரிவித்தார். நாரத ஜெயந்தி விருது வழங்கும் விழாவையொட்டி விஸ்வ சம்வத் கேந்திரா (வி.எஸ்.கே) அமைப்பு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் “நவீன சமூக ஊடகங்களின் சகாப்தத்தில் ஊடகங்களின் போக்குகள்” என்ற தலைப்பில் பேசிய செபாஸ்டியன் பால், “கருத்து சுதந்திரத்தை ஏற்க மக்களும் தயாராக வேண்டும். ஊடகத்துறையில் இணையம் நுழைந்தபோது, சுதந்திரத்தின் புதிய அடிவானம் திறக்கப்பட்டதாக எங்களது தலைமுறை நினைத்தது. எமர்ஜென்சி ஆட்சியின் போது தணிக்கை செய்யப்பட்ட முரட்டுத்தனமான அனுபவத்தில் இருந்து இத்தகைய நிவாரணம் கிடைத்தது. ஆனால் இப்போது அந்த அனுமானம் மாறிவிட்டது. நவீன சமூக ஊடகங்கள் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமென்றாலும் சொல்லக்கூடிய இடமாக தற்போது மாறிவிட்டதால் அதில் தணிக்கை என்பது அவசியமாகிறது. ஊடக தர்மமும், அதன் கலாச்சாரமும், கடமையும் சிறிதும் பொருந்தாத களமாக இது தோன்றுகிறது. அதனால்தான் கட்டுப்பாடுகள் தவிர்க்க முடியாததாகிறது. முன்னுதாரணமான ஊடகச் செயல்பாடுகளுக்கு நாரத மகரிஷி எல்லாக் காலத்திலும் ஒரு உதாரணம்” என்றார். டாக்டர் செபாஸ்டியன் பால், கலாசார ஊடகச் செயல்பாடுகளுக்கான பங்களிப்பிற்காக விருதை எம்.வி. பென்னிக்கு வழங்கினார். கே.ஆர். உமாகாந்தன் முதல் பேராசிரியர் எம்.பி. மன்மதன் புரஸ்கார் விருதை மாத்ருபூமி மூத்த நிருபர் டி.ஜே. ஸ்ரீஜித்துக்கு வழங்கினார். எம்.வி. பென்னி பேசுகையில், “நவீன சமூக ஊடகங்கள் உலகின் ரகசியக் கதவுகளைத் திறந்தன. உண்மையைப் பின்பற்றுவதே சரியான மற்றும் பாதுகாப்பான பாதை. இடஒதுக்கீடு இல்லாமல் மக்கள் நடந்து கொள்ளும்போது தர்ம வாழ்வு மேலோங்கும்” என கூறினார். விஸ்வ சம்வத் கேந்திரா தலைவர் எம்.ராஜசேகர பணிக்கர் கூறுகையில், தர்மத்தின் வெற்றிக்காக முரண்பாடுகளை சீர்படுத்திய ரிஷி நாரதர். நாரதர் என்பது கடவுளின் மனம். அவர் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால ஊடக தர்மத்தின் பொருத்தமான மாதிரியாக இருக்கிறார்” என்றார். முரளி பரப்புரம் , சம்வாத் கேந்திரா செயலர் எம். சதீசன், பொருளாளர் பி.ஜி. சஜீவ் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டு உரையாற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here