இந்திய கடற்படை சார்பில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்தியா – ரஷ்யா கூட்டாக இணைந்து ‘பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்’ என்ற நிறுவனத்தின் சார்பில் இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டது. இந்திய கடற்படைக்கு சொந்தமான, ஐ.என்.எஸ்., மர்முகோவா போர்க்கப்பலில் இருந்து நேற்று ஏவப்பட்ட இந்த ஏவுகணை, ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் செல்லக் கூடியது. ‘சமீபத்தில் கடற்படையில் இணைக்கப்பட்ட இந்தப் போர்க் கப்பலில் இருந்து, முதல் முறையாக இந்த ஏவுகணை செலுத்தி சோதிக்கப்பட்டுள்ளது. ‘முதல் முயற்சியே வெற்றிகரமாக அமைந்து உள்ளது. இது, தற்சார்புக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது’ என, இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.